என்ன 20மில்லியன் பேருக்கு தெரியும், எனக்கு அழகான பொண்ணு வேணும் – புகழ் போதை தலைக்கேறி பந்தா காட்டும் ரஜினியின் நண்பர்.

0
475
- Advertisement -

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை விமர்சனம் செய்த சத்யேந்திரா வீடியோவை தான் தற்போது நெட்டிசன்கள் கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். பொதுவாகவே, சினிமா உலகில் பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் அவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்றே தெரியாத அளவிற்கு சென்று விடுகிறார்கள். அந்த வகையில் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி சரியான வாய்ப்பு அமையாததால் பின்னோக்கி சென்ற நடிகர் சத்யேந்திரா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ரஜினி, ரகுவரன் என்று பல முன்னணி நடிகர்கள் உடன் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு ரஜினி, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவார்.

- Advertisement -

ஒரு முறை பேட்டியில் நடிகர் சத்யேந்திரா அவர்கள் ரஜினி, ரகுவரன் குறித்து பேசி இருந்தார். இவர் பிரபலமானது லியோ படத்தின் விமர்சனம் போது தான். இவர் இதற்கு முன்னாடி நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார். இருந்தாலும் இவர் பிரபலமானது லியோ படம் போது தான் .பேட்டியில் சத்யேந்திரா, எல் சி யு என்றாலே லோகேஷுக்கு தெரியாது. அதற்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது. ஆனால், அவர் எல்சியில் படம் எடுக்கிறேன் என்று பொய் சொல்லுகிறார்.

அவருடைய படம் எல்லாம் ஒண்ணுமே இல்ல குப்பை .மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். மக்களும் ஒரு முட்டாள். அவர் படத்தை பார்க்கும் எல்லோருமே முட்டாள்கள் தான் என்றெல்லாம் பேசி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலருமே கடுமையாக கண்டனம் தெரிவித்து சத்யேந்திராவை விமர்சித்து பேசி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சத்யேந்திரா ஒரு பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர், எனக்கு ஆயிரக்கணக்கான பெண் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் போன் நம்பர் எல்லாம் இருக்கிறது. எனக்கு திருமணம் என்பது பிடிக்காது. ஆனால், தினமும் ஒரு பெண்களுடன் பேச வேண்டும். ஒரு பெண் அழகாக இருக்க வேண்டும். இப்படிதான் ஒரு பெண் இருக்க வேண்டும். அவருடன் பேசணும் பழகனும் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து ஒரு பெண்ணை பேசி இருந்தார்.

மேலும், காத்து கருப்பு கலை பேட்டியில் தான் ஒரு பிரபலம், என்னை 20மில்லியன் பேருக்கு தெரியும், இப்போ என்னை 1000 கணக்கான யூடுயூப் சேனல் பேட்டி எடுக்க போட்டி போடுகிறது என்றும் பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலருமே பயங்கரமாக அவரை திட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு சத்யேந்திரா பேசி இருந்த பேட்டி வீடியோவையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement