நானும் விஜய்யும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம் என்று அதிரடியாக சீமான் பேசியிருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
லியோ படம்:
இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலிகான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
லியோ பட பாடல்:
இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதே வேளையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள புகைப்பிடிப்பது,மது அருந்துவது போன்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த பாடல் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார்.
சீமான் அளித்த பேட்டி:
தற்போது இது தொடர்பாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், பெரும்பாலும் விஜய் நடித்த பல படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இருக்கிறது. அப்போதெல்லாம் அந்த காட்சிகளை குறித்து யாரும் எதிர்ப்புகளைப் தெரிவிக்கவில்லை. இப்போது அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போகிறார் என்று தெரிந்த உடனே அவருடைய படத்திற்கு தடை விதிக்க சோசியல் மீடியாவில் வலியுறுத்தி வருகிறார்கள்.
அரசியல் குறித்து சீமான் கூறியது:
குறிப்பாக, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் படத்தில் மட்டுமே. இவை ஏனென்று எனக்கு தெரியவில்லை. விஜய் அரசியலுக்கு வருவது ஒரு சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வருவது திமுக அதிமுகவுக்கு ஆபத்து இல்லை. சீமானுக்கு தான் ஆபத்து என பிரச்சனை கிளப்புகிறார்கள். நாங்கள் இருவரும் எப்போதும் அடித்துக் கொள்ளமாட்டோம் . இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டியிடும். அதில் 20 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். யாருடனும் கூட்டணி கிடையாது என்று விஜய்க்கு ஆதரவாக சீமான் கூறியிருக்கிறார்.