மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.
திலீப் – மஞ்சு வாரியர்:
மேலும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
படு போல்ட் காட்சியில் மஞ்சு வாரியர் :
தமிழில் இவருக்கு சொல்லிகொல்லம்படி வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் செலக்டிவாக கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ஃபுட்டேஜ் (Footage) என்ற படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படி இதில் வழக்கத்திற்கு மாறாக போல்டான படுக்கையறை காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார் மஞ்சு வாரியர். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நடிகையா இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது என்று மிரண்டு போய்யுள்ளனர்.
நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அஜித்துடன் இணைந்து லடாக் பகுதிகளில் பைக் ரைடு செய்தார். இந்த நிலையில் பைக் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றிருந்தார். சர்ணாகுளம் காக்கநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகளின் முன்னிலையில் சரியாக பைக் ஒட்டி காண்பித்து ஓட்டுநர் உரிமத்தை முறைப்படி பெற்று இருந்தார்.