என்னங்க சொல்றீங்க, மங்காத்தா படத்தின் மாஸ் BGM இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா ? – இதோ வீடியோ.

0
668
mankatha
- Advertisement -

பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த மங்காத்தா படத்தின் பிஜிம் காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இன்னும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

- Advertisement -

மங்காத்தா படம்:

இந்த படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தயாநிதி அழகிரி, விவேக் இரத்தினவேல் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உட்படப் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

மங்காத்தா படத்தின் வெற்றி:

இன்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா படத்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மேலும், அஜித் நடிப்பில் வெளியான 50வது படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் மங்காத்தா கொண்டு சென்ற அளவிற்கு வேறு எந்த படமும் அவரை தூக்கி வைக்கவில்லை. இந்த படம் 50 கோடியை கடந்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

மங்காத்தா படத்தின் இசை:

மேலும், இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. குறிப்பாக, சொல்லவேண்டுமானால் மங்காத்தா படத்தின் பிஜிஎம் வேற லெவலுக்கு எடுத்து சென்றது. இன்று வரை அஜித் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று மங்காத்தா படத்தில் பிஜிஎம் தான். இந்த நிலையில் மங்காத்தா படத்தின் பிஜிஎம் காப்பி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மங்காத்தா படத்தின் பிஜிஎம் காப்பி:

அதாவது, மங்காத்தா படத்தில் போடப்பட்டுள்ள இந்த மாஸ் பிஜிஎம் கடந்த 2008ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த டெத் ரேஸ் படத்தின் பிஜிஎம் போலவே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். தற்போது ஹாலிவுட் படத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் மங்காத்தா பிஜிஎம் காப்பியா? என்று கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement