மங்காத்தா பைக் ஸ்டண்ட் காட்சியில் வந்தது அஜித்தும் இல்லை. இவர்கள் தான் அந்த ஸ்டன்டை செய்தது. வீடியோ இதோ.

0
48765
mankatha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தல அஜித் நடித்த படத்தின் ஸ்டன்ட் காட்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதோடு அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படங்களில் மங்காத்தாவும் ஒன்று. 2012 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மங்காத்தா.

-விளம்பரம்-

இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தின் ஓப்பனிங் காட்சியில் ஒரு ஸ்டண்ட் காட்சி செய்யப்பட்டிருக்கும். அந்த ஸ்டன்ட் காட்சியை நடிகர் அஜித் அவர்கள் டூப் போடாமலேயேசெய்தார் என்று இன்றும் கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் கூட மங்காத்தா படத்தில் மேக்கிங் வீடியோ ஒன்றும் வைரலானது. அதே போல மங்காத்தா படத்தின் போது அஜித் பைக் ஓட்டும் போது அவரது பின்னால் பைக்கில் அமர்ந்தது மறக்கமுடியாத அனுபவம் என்று வைபவ் அப்போது பேட்டி ஒன்றை கூட கொடுத்திருந்தார். ஆனால், சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் அந்த காட்சியில் அஜீத் மற்றும் வைபவ் நடிக்கவே இல்லை என்று கூறியிருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் பிஸ்மி மீது கடும் கோபத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சியில் அஜித் மற்றும் வைபவ்வாக நடித்தது தாங்கள் தான் என்று பைக் ஸ்டண்ட் செய்யும் அபிஷேக் செந்தில் சகோதரர்கள் மேலும், இவர்கள் கோ, எந்திரன், மாஸ், காஸ்மோரா போன்ற படங்களில் வந்த பைக் ஸ்டண்ட் காட்சிகளை கூட இவர்கள் தான் செய்தார்களாம்.

-விளம்பரம்-
Advertisement