மது கிடைக்காததால் மனோரம்மா மகன் எடுத்த விபரீத முடிவு. மருத்துவமனையில் அனுமதி.

0
15709
manoramma
- Advertisement -

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கோர தாண்டவம் தான் தலைவிரித்து ஆடி வருகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். கொரோனவினால் நாளுக்கு நாள் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவினால் 5194 பேர் பாதிக்கப்பட்டும், 149 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதனால் போக்குவரத்து, மது கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் பாருங்க : ரம்யாவை தொடர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட பாவனா. வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை மறைந்த மனோரமாவின் ஒரே மகன் ஆன பூபதியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த ஒரு மதுபான கடைகளும் செயல்படுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும், அரசாங்கத்திற்கு தெரியாமல் பிளாக்கில் சரக்குகளை விற்றும் வருகின்றனர்.

-விளம்பரம்-
கள்ளர் குல வரலாறு: மனோரமா ...

பல பகுதிகளில் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மதுக்கடைகள் இல்லாததால் பல குடிமகன்கள் தான் என்ன செய்கிறோம் என்று செய்வதறியாமல் பயத்தியம் பிடித்தது போல் உள்ளார்கள். அதிலும் ஒரு சில பேர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து திருடி குடிக்கும் அளவிற்கு சென்று விட்டார்கள்.

இந்நிலையில் நடிகை மனோரமாவின் மகன் பூபதியும் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஏற்கனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ளது. இவர் மது போதைக்கு அடிமையாக உள்ளார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எங்கேயும் மது கிடைக்காத ஆத்திரத்தில் பூபதி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : கடன் பிரச்சனையில் சிக்கிய விநியோகிஸ்தர்கள். மௌனம் காக்கும் விஜய் மாமா. பஞ்சாயத்து செய்த சசிகலா புஷ்பா.

தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அருண்பாண்டி,அசன்மைதீன் ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்து உயிர் இழந்தார்கள். அதே போல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மது கிடைக்காத ஆத்திரத்தில் செங்கல்பட்டை சேர்ந்த சிவசங்கர், பிரதீப், சிவராமன் ஆகிய 3 பேரும் குளிர்பானத்தில் ஷேவிங்கை கலந்து குடித்து இறந்துள்ளனர்.

பல இடங்களில் மது வேண்டும் என்று போராட்டம் செய்தும் வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இந்த மது பிரச்சனை ஒரு பக்கம் பூகம்பம் போல் வெடித்து வருகிறது. இதற்கு அரசாங்கத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும். தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற பழம் பெரும் நடிகை மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் நடிகை மனோரமா அவர்களை “ஆச்சி” என தான் அழைக்கப்பட்டார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement