விஜயும் இல்ல ரஜினியும் இல்ல நிஜ வாழ்க்கைல சூப்பர் ஸ்டார்னா அது அவர் மட்டும் தான் – மன்சூர் அலிகான் ஓப்பன் டால்க்

0
1863
Vijay
- Advertisement -

வயசான சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்று மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கடந்த ஆண்டிலிருந்தே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை விஜயின் “வாரிசு” படத்தின் மூலம் பெரிதாக வெடித்தது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியது பெரிய சர்ச்சையாக மாறியது.

-விளம்பரம்-

அதோடு நடிகர் சரத்குமாரும், சூப்பர் ஸ்டார் விஜய் என்று தான் இசை வெளியீட்டு விழாவிலே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொல்ல போனால், இவர் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகியது. அதற்குப் பிறகு சோசியல் மீடியாக்களிலும் இந்த பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது. விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். பல விதமான மீம்ஸ்களை போட்டு ஒருவரை ஒருவர் கலாய்த்தும் வருக்கின்றனர் .

- Advertisement -

ஜெயிலர் படம்:

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல், ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது, ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது.

பட்டம் குறித்து பிரபலங்களின் கருத்து:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல் வரிகள் எல்லாம் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள் இதனால் விஜய்-ரஜினி ரசிகர்கள் மத்தியில் பனிப்போரே நடந்து இருக்கிறது. இதை அடுத்து இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் மன்சூர் அலிகான் கூறியது, வயதானால் பட்டத்தை விட்டுக் கொடுத்து விட வேண்டும்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆக திலிப் குமார் இருந்தார். அதற்கு பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். பின் அமிதாபக்சன் இப்போது ஷாருக்கான். அதேபோல் தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு தான் ரஜினிகாந்த் வந்தார். ஒருவருடைய மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்தாலே அவர் தான் உச்ச நட்சத்திரம் என்று சொல்கிறார்கள். உண்மையில் சொல்ல போனால், ரஜினிகாந்த் சினிமாவில் தான் சூப்பர் ஸ்டார். அவர் நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும் தான்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சொன்னது:

அவர் மக்களுக்காக நிறைய செய்திருக்கிறார். எம்ஜிஆர் மக்களுக்காக நிறைய செய்துள்ளார். மக்களுக்காகவே வாழ்ந்தார். ஆனால், ரஜினிகாந்த் அப்படி இல்லை. அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. தமிழக மக்களுக்காக செய்தால் நன்றாக இருக்கும். மண்ணை தோண்டுகிறார்கள், கற்பழிக்கிறார்கள் அவர்கள் ஆதரவு கொடுத்து வலது சரியா இருக்கிறார். சினிமாவில் மட்டும் தான் அவர் இடது சரியாக இருக்கிறார் என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

Advertisement