கேப்டன் இறந்த செய்தி அறிந்ததில் இருந்து மன்சூர் அலிகான் செய்த செயல் – இறுதி சடங்கில் கேப்டன் குடும்பத்தினர் கொடுத்துள்ள கெளரவம்

0
634
- Advertisement -

விஜயகாந்த் மறைவிற்கு மன்சூர் அலிகான் செய்திருக்கும் செயல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.
பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. மேலும், சரக்கு படத்தின் ப்ரோமோஷன் ஆரம்பித்ததில் இருந்தே மன்சூர் அலி கான் குறித்து பல சர்ச்சைகள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக, திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் மோகாசமாக பேசியிருந்தது மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மன்சூர் அலிகான் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. பின் திரிஷா மீது மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பின் நீதிபதி, மன்சூர் அலிகானை வெளுத்து வாங்கி இருக்கிறார். இப்படி சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சைகள் அதிகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் இறப்பு:

இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு மன்சூர் அலிகான் செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள்

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் செய்த செயல்:

இந்த நிலையில் விஜயகாந்த் இறப்பு செய்தியை அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பின் சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜய்காந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உடல் வாகனத்தில் வைத்து மக்களோடு மக்களாக மன்சூர் அலிகான் நடந்து சென்றிருக்கிறார். பின் விஜயகாந்த் உடைய உடல் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் பாராட்டு:

இரவு ஆகியும் அவருடைய உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் மன்சூர் அலிகான் இருக்கிறார். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் மன்சூர் அலிகான், விஜயகாந்த் கூடவே இருந்திருக்கிறார். இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும் வரை மன்சூர் அலிகான் இருந்திருக்கிறார். இப்படி மன்சூர் அலிகான் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. மேலும், விஜயகாந்தை நல்லடக்கம் செய்ய உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடிகர் மன்சூர் அலி கான் இறுதிச் சடங்குகளை காண அமர வைக்கப்பட்டுள்ளார். இறுதிச் சடங்குகளில் கலந்துக்கொள்ள 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement