அன்னிக்கி இந்த மனுசன கிண்டல் செஞ்சி வீடியோ பண்ணிட்டு இப்போ இரங்கல் தெரிவிக்க வந்தீங்களா? கோபி சுதாகரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
557
- Advertisement -

நேற்று முதல் சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

கேப்டன் மறைவு:

கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

பிரபலங்கள் இரங்கல்:

முதல்வர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் என பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், வடிவேலு மட்டும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தொடர்பாக அவர் பதிவும் போடவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பரிதாபங்கள் சுதாகர், கோபி இருவரும் நேரில் சென்று விஜயகாந்த்க்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பரிதாபங்கள் சுதாகர், கோபி வீடியோ:

இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே பரிதாபங்கள் கோபி, சுதாகர் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். காரணம், விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது அவருடைய உடல்நிலை குறித்தும், அவரை குறித்தும் மோசமாக விமர்சித்து வீடியோ எல்லாம் போட்டு இருந்தார்கள். பின் அவர் இறந்த பிறகு அவருடைய இறப்புக்கு வந்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இதனால் தான் நெட்டிசன்கள், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கடா. செஞ்ச பாவம் கொஞ்சமாவது குறையும். கொஞ்ச நஞ்சமாடா ஆடுனீங்க என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்

கோபி மற்றும் சுதாகர். குறித்த தகவல்:

யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர்கள் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் யூடியூபில் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி இருந்தார்கள். அதில் அவர்கள் வீடியோக்களை போட்டு வந்தார்கள். அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்களுடைய பாணியில் நகைச்சுவை கலந்து கொடுத்து வருகின்றனர் கோபி மற்றும் சுதாகர்.

Advertisement