பிரசவத்தின்போது நேர்ந்த அவலம். ஆம்புலன்ஸ்ஸின் தாமதத்தால் உயிரிழந்த நடிகை மற்றும் சிசு.

0
15980
- Advertisement -

சினிமா துறையில் பிரபலமான மராத்தி நடிகை பூஜா சஞ்சார் அவர்கள் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அநியாயமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு குறித்து பல கேள்விகள் இணையங்களில் எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். நடிகை பூஜா சஞ்சார் மகாராஷ்டிராவில் ஹுங்கொளி என்ற இடத்தில் வசித்து வந்தவர். இவர் மராத்தி மொழி திரைப்படங்களில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு 25 வயதுதான் ஆகிறது. இந்த நிலையில் இளம் நடிகை பூஜா சஞ்சார் கருவுற்றிருந்தார். இவர் கர்ப்பமாக இருந்ததால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்தார். மேலும், வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for pooja zunjar

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால் அதாவது திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் உடனே இவரை ஹிங்கோலி மாவட்டத்திற்குட்பட்ட பூஜாவின் சொந்த ஊரான கோரிகயானில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின்னர் பூஜா சஞ்சாருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே துரதிஸ்டவசமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே பூஜாவின் உடல்நிலை மோசமாக மாறியது. பின்னர் நடிகையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததை கருதி மருத்துவர்கள் உடனடியாக ஹின்கோலி சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். ஆனால்,மருத்துவர்கள் கூறும் மருத்துவமனை கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலை தூரத்தில் இருந்தது.

இதையும் பாருங்க : கையில் இருந்த முன்னாள் காதலரின் டாட்டூ. திருமணத்திற்க்கு பின் மாற்றிக்கொண்ட மானசா.

- Advertisement -

மேலும், அந்த நேரத்தில் பூஜாவை அழைத்து செல்ல எந்த ஒரு ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.அதோடு ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. பின்னர் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இருக்கும் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸும் ஒரு மணி நேரம் கழித்த பிறகுதான் கிடைத்தது. பின் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு பூஜா சஞ்சாரை ஆம்புலன்ஸில் அழைத்துக்கொண்டு சென்றார்கள் உறவினர்கள். ஆனால்,பூஜா சஞ்சார் செல்லும் வழியிலேயே அநியாயமாக உயிரிழந்தார். மேலும், குழந்தையும் உயிரிழந்துள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசார் medico-legal கேஸ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து உறவினர்களிடம் விசாரித்த போது, ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைத்திருந்தால் பூஜா உயிருடன் இருந்திருப்பார் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Image result for pooja zunjar

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் மனத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவசரம் என்ற நிலைமைக்கு வருவது தானே ஆம்புலன்ஸ். இப்படி ஆம்புலன்ஸ் தாமதமாக வந்து அநியாயமாக ஒரு உயிரை பறித்து விட்டது. அதற்கு என்ன? அவசர பிரிவு என்று பெயர் என நெட்டிசன்கள் கடுமையாக கூறுகின்றனர். எப்பவுமே மற்ற துறையில் உள்ளவர்கள் தான் எந்த ஒரு விஷயத்திற்கும் தாமதமாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், ஒரு பிரச்சினை என்றால் திடீரென்று வருவது ஆம்புலன்ஸ் தான் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனால், ஆம்புலன்சே இப்படி ஒரு உயிரையே எடுக்கும் அளவிற்கு மாறிவிட்டது என்று பல கருத்துக்களை இணையங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும்,ஆம்புலன்ஸ் தாமதமாக வந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும்,இதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement