நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதி படமா – தேவர் மகன் குறித்து மாரிசெல்வராஜ் பேச்சால் கடுப்பான கமல் ரசிகர்கள்.

0
1947
Mariselvaraj
- Advertisement -

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலை மாரி செல்வராஜ் வெச்சி செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

படத்தின் ரிலீஸ்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. அதில், மாமன்னன் படக்குழு, கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த விழாவிற்கு கமலஹாசன் தலைமை தாங்கினார் என்று சொல்லலாம். ஆனால், ரஜினி மட்டும் வரவில்லை. மேலும் விழாவில் மாரி செல்வராஜ் கூறியிருந்தது, தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் பேச்சு :

கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகன் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. எல்லா இயக்குனர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். தேவர்மகன் படம் எனக்கு ஒரு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்து கொள்வது.

தேவர் மகன் குறித்து பேசிய மாரி செல்வராஜ் :

இந்த படம் சரியா தப்பா என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி. தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார்.ஆனால், கமலஹாசன் நிகழ்ச்சியில் அமைதியாக எதுவும் பேசாமல் சிரித்தபடியே மனதிற்குள் கோபத்தை வைத்துக்கொண்டு படத்தை பாராட்டி பேசி இருக்கிறார்.

விமர்சிக்கும் கமல் ரசிகர்கள் :

இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் வம்புக்கு இழுத்ததை குறித்து கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். அதோட மாரி செல்வராஜூக்கு ஏற்கனவே கமல் மீது தீராத பகை இருந்திருக்கிறது. அதை இந்த மாமன்னன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் வைத்து தீர்த்து கொண்டீர்கள் என்றும், நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதிப்படமா ? என்றும் கமலின் ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். தற்போது சோசியல் மீடியாவில் கமல் ரசிகர்களுக்கும் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கும் இடையே பெரிய கலவரமே நடந்து கொண்டிருக்கின்றது.

Advertisement