விஜய் விழாவில் நடந்தது இதுதான் – நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி சொன்ன உண்மை

0
2249
- Advertisement -

விஜய் குறித்து கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கற்பகம் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இருப்பது விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான். சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது. அந்த விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். மேலும், இந்த விழாவில் தமிழக +2 பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த நந்தினிக்கு விஜய் அவர்கள் வைர நெக்லஸை பாராட்டி பரிசாக கொடுத்திருந்தார்.

- Advertisement -

விஜய் விருது வழங்கிய நிகழ்ச்சி:

மேலும், இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் கற்பகம். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் .இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து கற்பகம் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் எம் சி பண்ணிட்டு இருக்கிறேன். அது தவிர பாண்டிச்சேரியில் ஒரு youtube சேனலும் நடத்திக் கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் அளித்த பேட்டி:

விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழாவிற்கு புஸ்ஷி ஆனந்த் சார் தான் என்னை பரிந்துரை செய்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் அந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம் எல்லோரும் ஆடியோ லான்ஜில் தான் அவர் பேசுவதை பார்த்திருக்கிறோம். நானும் டிடி அக்கா, மிர்சி விஜய் எல்லாம் தொகுத்து வழங்கி பார்த்திருக்கிறேன். ஆனால், நம்மளும் ஒரு நாள் அந்த இடத்தில் நின்று அவருக்கு ஹோஸ்ட் செய்வேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.இதே மாதிரி ஹோஸ்ட் பண்ணுகிற ஆசை இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆர்வம், சந்தோசம், பொறுப்புணர்வு எல்லாமே வந்து விட்டது.

-விளம்பரம்-

தற்போது இந்த நிகழ்ச்சியை நல்லபடியாக முடித்து விட்டேன். நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி விஜய் சார் மீட்பண்ண வில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் நான் அவரை மீட் பண்ண வில்லை. அன்று எல்லோரும் பார்க்கும்போதுதான் நானும் அவரை பார்த்தேன். புஸ்ஸி சார் நீங்க நல்லா பண்ணி இருந்தீங்க என்று வாழ்த்தினார். மேடையில் விஜய் சாருடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு ரெண்டு மூணு முறைதான் ஐகாண்டாக்ட் மட்டும் இருந்தது. அவர் ஒரு ஸ்மைல் பண்ணி வணக்கம் சொன்னார். நானும் திரும்பி சொன்னேன். குட்டி குட்டி விஷயங்கள் தான் அங்கு நடந்தது. அது தவிர்த்து அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இது லைஃப் டைம் முமண்ட் :

காலையில் இந்த நிகழ்ச்சி 10.45க்கு தொடங்கி நைட் 12:30 வரையும் நடந்தது. நிகழ்ச்சி முடியிர வரைக்குமே விஜய் சார் நின்று கொண்டு தான் இருந்தார். இடையில் ஒரு ஐந்து பத்து நிமிஷம் தான் பிரேக் இருந்தது. ஐந்து பேர் ஃபேமிலியில் வந்தாலும் அவ்வளவு பொறுமையாக அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு பதில் அளித்தார். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் எப்படி உபசரிப்பாரோ அந்த அளவிற்கு பொறுமையாக முகம் சுளிக்காமல் சிரித்தே பதில் அளித்து இருந்தார். நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து முடியும் வரை அதே சிரிப்போடு தான் இருந்தார். எல்லோரையும் தன்னோட தம்பி, தங்கையாக தான் பார்த்தார். அதை நீங்கள் நன்றாக பார்த்தால் புரியும். இது எனக்கு இது லைஃப் டைம் முமண்ட் தான். சீக்கிரமே அவரை சந்தித்து அவரிடம் பேச வேண்டும். அதே மாதிரி அன்று அவர் கூட சேர்ந்து போட்டோ எடுக்க முடியவில்லை. அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்கணும் என்று சிரித்துக் கொண்டே கூறியிருந்தார்.

Advertisement