சங்கி அஞ்சனா என்று கிண்டல் செய்த நபர். அஞ்சனா கொடுத்த பதிலடி.

0
6603
anjana
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி ஜே அஞ்சனா. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் தொலைக்காட்சி பணிபுரிந்து இருக்கிறார். தொகுப்பாளினியாக இருந்த போது இவர் பல படங்களின் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததது. அந்த குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு வி ஜே அஞ்சனா சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், விஜே அஞ்சனா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் அஞ்சனா பிரதமர் மோடி குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார் இந்த பதிவால் அஞ்சனாவை ரசிகர் ஒருவர் சங்கி என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : கௌதமியால் கமலுக்கு நேர்ந்த பிரச்சனை. பாஸ்போர்ட்டால் வந்த குழப்பம்.

- Advertisement -

தற்போது உலக நாட்டையே உலுக்கி வருவது கொரோனா வைரஸ் என்ற கொலைகார நோய்தான். சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 834 பேர் கொரோனாவைரஸால்  பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய பல கோடி நிதி தேவைப்படுவதால் நாட்டின் பிரதமர் மோடி, மக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சஞ்சனா, மோடி குறித்து சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், மதிப்புக்குரிய பிரதம மந்திரி மோடி ஜி அவர்களுக்கு எந்த அளவிற்கு மன அழுத்தம் இருக்கும் என்பதை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். இது நம்முடைய நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தான்.

இதையும் பாருங்க : 5 நிமிடம் வெளியில் சென்றதால் அவஸ்தை படுகிறேன்.ஷாக் கொடுத்த நடிகை கிரண்.

-விளம்பரம்-

வீட்டில் இருங்கள், உயிரோடு இருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் அன்பை பகிருங்கள் வெறுப்புகளை தவிர்த்து நாம் குழுவாக செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் ‘சங்கி அஞ்சனா’ என்று கமன்ட் செய்ய, அதற்க்கு அஞ்சனா, இருந்துட்டு போறேன் என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement