மெரீனா பட நடிகர் தென்னரசு தூக்கிட்டு வீட்டிலேயே தற்க்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது . சமீப காலமாகவே திரைத்துறையை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் மெரீனா படத்தில் நடித்த தென்னரசு என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் மெரீனா. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் ஹீரோவானாக களமிறங்கினர். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தென்னரசு. நடிகர் தென்னரசு சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னரசு – பவித்ரா தம்பதியருக்கு இரண்டு வயது குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ள நிலையில் வீட்டில் உள்ள சீலிங் பேனில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் தென்னரசு. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் தென்னரசுவின் தற்கொலை குறித்து அப்பகுதியில் வசித்தவர்கள் தெரித்ததாவது. ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அதே போல தென்னரசுவிற்கும் சினிமா படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இல்லை. அதனால் கூட அவர் இப்படி பண்ணி இருக்கலாம். என்ன இருந்தாலும் அந்த பெண் மற்றும் குழந்தையின் நிலையும் தான் ரொம்ப பாவம் என்று குறியுள்ளனர்.