சாதி பிரச்சனைகளுக்கு நீங்க எடுக்கற படங்கள் தான் காரணம்னு சொல்றாங்களே – பத்திரிகையாளர் கேள்விக்கு மாரி செல்வராஜ் பதில்

0
2025
- Advertisement -

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்றவர்கள் படம் எடுப்பது தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் பதில் அளித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில் இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் போன்ற பலர் பங்கேற்றனர். ஆனால், இந்த விழாவில் பஹத் பாஸில் பங்குபெறவில்லை. இந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ் ‘நான் என்ன பேசப்போகிறேன் என்பதை உதயநிதி காண்காணிக்கிறார். இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

‘நாம் பாடிக்கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி, ஓரிழை யாழாக மாற்றி அதைத் தெருத்தெருவாக மீட்டிவருவேன். உண்மையை கேக்க கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் என்று பேசி இருந்தார். இதனை தொடர்ந்து விழா முடிந்துவிட்டு வெளியில் வந்த மாரி செல்வராஜிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

- Advertisement -

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘மேலும் இந்த படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்தான் ஆனால் தென் மாவட்டங்களில் பகத் பாஸில் காட்சிகளை டெலிட் செய்து சமூக வலைதளத்தில் கொண்டாடினார்களே ? நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்களா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு ‘அதைப் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதை நீங்கள் கொண்டாடியவர்களிடம் போய் கேளுங்கள்.

எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் சேர வேண்டும் என்பதுதான் அதை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஒரு படம் நான்கு நாட்களில் முடியபோது கிடையாது. நான்கு நாட்களில் பேசப்படுவதை வைத்து முடிவு செய்ய முடியாது. பல ஆண்டுகள் அந்த திரைப்படம் பேசும், கதாபாத்திரங்கள் நிலை மாறும், நிறம் மாறும் இறுதியில் அந்த கதாபாத்திரங்கள் அதன் நிலையை அடையும் படம் பார்க்க பார்க்க அதன் உண்மையை பேசும்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே நாங்குநேரி சம்பவத்திற்கு ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் மற்ற ஜாதியினரை தவறாக காண்பித்து படம் எடுப்பது தான் காரணம் என்று சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது. அதுபோக நடிகர் எஸ் வி சேகர், நாங்குநேரி சம்பவத்திற்கு சினிமாவும் ஒரு காரணம் என்று இயக்குனர் முத்தையா, ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களை கடுமையாக சாடி இருந்தார்.

சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால் தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையா தான். ‘கொம்பன்’ படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர் தான். அப்புறம் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குனர்கள் அதை தொடர்கிறார்கள். தன் சாதியை உயர்த்துவது தப்பு இல்லை. ஆனால், அடுத்த சாதியை தாழ்த்திக் காட்டுவது தான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுப்பாங்களா? என்று கோபத்தில் கொந்தளித்து பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement