அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் இயக்குனர் – உறவினர்கள் சொன்னது என்ன ?

0
1250
- Advertisement -

மர்மதேசம் இயக்குனர் நாகா இறந்துவிட்டார் என்று பரவிய வதந்திக்கு அவருடைய குடும்பத்தினர் கொடுத்து இருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் நாகா. இவர் இயக்கிய சீரியல்கள் எல்லாமே 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

குறிப்பாக, மர்ம தேசம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் போன்ற பல தொடர்கள் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இன்றும் இந்த சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் நாகா. மேலும், இவருடைய படைப்புகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருடைய கதைக்களத்தையும் விறுவிறுப்பான காட்சிகளையும் கண்டு இயக்குனர் சங்கரே மிரண்டு பாராட்டி இருந்தார்.

- Advertisement -

நாகா திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் படம் இயக்கவும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் நாகா இயக்கிய படம் தான் ஆனந்தபுரத்து வீடு. இந்த படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்திருந்தது. இதை தொடர்ந்தும் இவர் பல சீரியல்களை இயக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றி இருந்தார். இதனால் தான் இவரால் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

நாகா உடல்நிலை:

தற்போது இவர் ஓடிடி நிறுவனம் ஒன்றிற்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு நாகா மயங்கி விழுந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து நாகாவிற்கு உடனடியாக முதலுதவியும் செய்திருந்தார்கள். பின்னர் அவரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தார்கள்.

-விளம்பரம்-

நாகா மரணம் குறித்த வதந்தி:

அப்போது இயக்குனர் நாகாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. பின் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார். தற்போது நலத்துடன் இருப்பதாகவும் கூறி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் திடீரென சிலர், மர்ம தேசம் சீரியல் இயக்குனர் நாகா இறந்துவிட்டார் என்று இணையத்தில் கொளுத்தி விட்டு இருக்கிறார்கள். இவர்கள் கொளுத்திவிட்ட தீ காட்டுத்தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பலருமே நாகா உடைய மரணத்திற்கு இரங்கல் பதிவு எல்லாம் போட்டு இருந்தார்கள்.

நாகா குடும்பம் கொடுத்த விளக்கம்:

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாகா குடும்பத்தினர் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், சோசியல் மீடியாவில் வரும் செய்திகள் எல்லாம் துளி கூட உண்மை இல்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. கூடிய விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement