தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு இவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பின் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வில்லன் பவானி ரோலில் மகேந்திரன் நடித்து இருந்தார். ஏற்கனவே இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், பல வருடங்கள் கழித்து இவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து இருந்தார். மாஸ்டர் படத்தில் மகேந்திரன் சிறிது நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார்.
மாஸ்டர் மகேந்திரன் குறித்த தகவல்:
மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் அதே நிலையில் தான் மகேந்திரன் இருக்கிறார். கடைசியாக இவர் 29, சூர்யாவின் கருப்பு போன்ற பட்டங்களில் நடித்து இருந்தார். தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை குறித்து மகேந்திரன் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

மகேந்திரன் பேட்டி:
இது தொடர்பாக அளித்த பேட்டியில் மகேந்திரன், தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கு. என் வீட்டிலும் மின் வெட்டு இருக்கு. அதுக்காக நம்ம முதலமைச்சர் விஜய் கேள்வி கேட்க எழுப்பினால் உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? இப்ப முதலமைச்சரை நோக்கி மைக்கை நீட்டி என்னங்க, தமிழ்நாட்டில ஒரே மின்வெட்டா இருக்கு? அப்படின்னு கேள்வி கேட்டா உடனே கரண்ட் வந்துருமா? என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இப்படி இவர் பேசிய கருத்து சில நிமிடங்களில் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலருமே, மாஸ்டர் மகேந்திரனை வறுத்தெடுத்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசிகிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வேலை மகேந்திரன் செய்திருப்பதால் பலருமே கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். சிலர், முதலமைச்சரை கேள்வி கேட்காமல் வேறு யாரை கேட்க முடியும்? என்றெல்லாம் கொந்தளிக்கிறார்கள்.






