தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே மாஸ்டர் மகேந்திரன் தான். சமீபத்தில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை குறித்து மகேந்திரன், தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கு. என் வீட்டிலும் மின் வெட்டு இருக்கு. அதுக்காக நம்ம முதலமைச்சர் விஜய் கேள்வி கேட்க எழுப்பினால் உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? அதோட இவ்வளவு நாள் நீங்கள் கரண்ட் இல்லாம இருந்தீங்க இல்ல, ஒரு ஆறு மாதம் இந்த பிரச்சனை வந்தால் எதிர்கொண்டு போக முடியாதா? என்று பேசியிருந்தார். இதை அடுத்து சோசியல் மீடியாவில் இரண்டு நாட்களாகவே மாஸ்டர் மகேந்திரனை வருத்தெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னை பற்றி சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதால் விளக்கம் கொடுத்து மகேந்திரன் போட்ட வீடியோவில், சமீபத்தில் நான் கொடுத்த பேட்டியில் பேசிய விஷயங்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் ஆகி வருகிறது.

நான் யாரையெல்லாம் மதிக்கிறேனோ, யாருடைய கருத்துக்களை எல்லாம் சரி என்று என்னுடைய நண்பர்களிடம் இவ்வளவு நாளாக பேசி வந்தேனோ அவர்களே என்னை பற்றி பேசி இருந்தார்கள். மகேந்திரன் இதைச் சொல்ல வரவில்லை வேறு ஏதோ சொல்லி இருக்கிறார் என்று அவர்கள் யோசித்து ஆதரவாக பேசி இருக்கலாம். மக்களுக்கு நான் சொல்ல வந்தது, பேட்டியில் கேள்வி கேட்டா கரெக்டா வந்துருமா? என்று நான் யாரை பார்த்து கேட்டேன் என்றால் மின்சார பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்களையும், மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் பண்ணுவார்கள் மற்றும் எதற்கு எடுத்தாலும் கடைசி வரை கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பவர்களை நோக்கி தான் கேட்டேன்.
மின்வெட்டு சர்ச்சை:
அதேபோல் ஆறு மாதம் டைம் கொடுங்கள் கேள்வியை கேட்காதீர்கள் என்று நான் ஏன் சொன்னேன் என்றால், அண்ணா விஜய் ஆட்சிக்கு வரும்போது எனக்கு ஒரு ஆறு மாத கால அவகாசம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரியாக அமைத்து நல்ல ஆட்சியை தருகிறேன் என்று சொன்னார். அவர் மீது இருந்த நம்பிக்கை மற்றும் அன்பின் காரணமாக தான் நான் அதை குறிப்பிட்டேனே தவிர பொதுமக்களுக்காக நான் சொல்லவில்லை. சோலார் சிஸ்டம் என்று நான் பேசியது என்னுடைய வார்த்தை பிழை. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் கிடையாது. ஒரு சாதாரண ஆவரேஜ் மாணவன். வார்த்தை தடுப்பில் சோலார் சிஸ்டம் என்று கூறிவிட்டேன். அதற்கு பதிலாக சோலார் எனர்ஜி, சோலார் பவர் அல்லது சோலார் பேனல் என்றுதான் நான் சொல்லி இருக்க வேண்டும்.

மகேந்திரன் பேட்டி:
கேரளா கொச்சி சர்வதேச விமான நிலையம் ஒட்டுமொத்தமாகவே சோலார் எனர்ஜி இயங்கும் ஏர்போர்ட்டாக மாற்றப்பட்டது. அதை நான் நேரில் பார்த்தபோது, ஏன் தமிழ்நாட்டிலும் நம் கிராமத்து மக்கள் மின்சாரத்திற்கு இவ்வளவு கஷ்டப்படும்போதும் இந்த மாதிரியான திட்டங்களை நம் அரசு செய்யவில்லை என்று யோசித்தேன். ஆனால், அதற்கு பிறகு தான் தெரிந்தது. 2011லயே முதலமைச்சர் ஜெயலலிதா பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் மேல் கூரைகளில் சோலார் பேனல் அமைக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது தெரிய வந்தது. அதை நாம் சரியாக பயன்படுத்தியிருந்தாலே இன்று இந்த பிரச்சனையை நாம் தவித்திருக்கலாம். அதோடு மக்களின் கஷ்டத்தை பார்த்து நான் சிரிப்பதாகவும் ஏளனமாகவும் பேசுவதாகவும் இன்னொரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

பகிரங்க மன்னிப்பு:
ப்ளீஸ் எனக்கு அப்படிப்பட்ட பட்டங்களை எல்லாம் கொடுத்து விடாதீர்கள். இன்று நான் ஒரு வேலை சோறு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு மக்கள் தான் காரணம். இவ்வளவு முக்கியமான என் மக்களை நான் எப்படி ஏளனம் செய்வேன். என்னுடன் இருந்தவர்களுக்கு நான் மக்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது நன்றாக தெரியும். நான் சரியாக நடிக்க வில்லை என்றாலோ என் படம் நன்றாக இல்லை என்றால் விமர்சியுங்கள். அதை தவிர்த்து இப்படியான தவறுகளை என் மீது சுமத்த வேண்டாம். என்னுடைய இந்த பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஏதேனும் ஒரு பொது மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் நான் என் மனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் என் நன்றி என்று கூறியிருக்கிறார்






