இதற்காகத்தான் பர்ஸ்ட் லுக்கில் blur இமேஜ் கொடுத்தோம். போஸ்டர் வடிவமைப்பாளர் சொன்ன செம காரணம்.

0
41048
master
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்நிலையில் தற்போது “தளபதி 64” படத்துக்கு “மாஸ்டர்” என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க ; ஜிகு ஜிகு உடையில் படு கிளாமர் போஸ்களை அள்ளி வீசிய மீசைய முறுக்கு ஆத்மீகா.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கான பஸ்ட் லூக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. இந்த போஸ்டர் குறித்து கோபி பிரசன்னா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அந்த பேட்டியில் விஜயின் போஸ்டர் blur ஆக இருப்பதற்கான விளக்கத்தையும் கூறி உள்ளார். அவர் கூறியது, முதலில் விஜய் அவர்களின் புகைப்படத்தை அப்படியே தான் போஸ்டரில் வைக்கலாம் என்று யோசித்தார்கள். ஆனால், நான் தான் blur ஐடியாவை கொடுத்தேன். மேலும், அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருக்கும் என்பதால் அப்படியே செய்தோம்.

Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜூம், விஜய்க்கும் இந்த ஐடியா மிகவும் பிடித்து விட்டது. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று வியப்புடன் என்னை பாராட்டினார்கள் என கோபி பிரசன்னா தெரிவித்து உள்ளார். இந்தப் போஸ்டர் வெளி வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிக பாப்புலராகி விட்டது. தற்போது ‘மாஸ்டர்’ என்ற ஹேஸ்டேக்குகைகளை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த போஸ்டர் ட்விட்டரில் 3.43 மில்லியன் தாண்டி ட்விட்டரில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் அவர்கள் கோபமும் சிந்தனையும் உள்ளவராக தலையை கோதியபடி அசையும் படியாக அமர்ந்திருக்கிறார். அதோடு ஒரு வளையத்தை சுற்றி விட்டு கையில் பிரமிடை சுட்டிக்காட்டும் படியாக தோற்றமளிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆக நடிப்பது என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்தது. அதனால் தான் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் அதிரடியான ஆக்ஷன் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Advertisement