சாமியாரின் ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி – கூடவே தன் படத்தையும் Promotion செய்து கொண்டாரா ?

0
366
vijayantony
- Advertisement -

தமிழ் நாட்டின் நாடக தந்தை என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி குத்தாட்டம் போட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்த விடியோவானது தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் நாடக உலகின் முன்னோடியான சங்கரதாஸ் சுவாமிகள்7-9-1867ல் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கம்பட்டி என்ற ஊரில் பிறந்தார்.தன்னுடைய தொடக்க கல்வியை தன் தந்தையுடம் பயின்று. தமிழறிவை தண்டபாணி என்வரிடம் கற்றுக்கொண்டார்.

-விளம்பரம்-

தமிழறிவின் காரணமாக தனது சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் போக அந்த ஆர்வம் காலப்போக்கில் அவரை நாடகங்கள் பாகம் ஈர்த்து. தனது 24வது வயதில் தான் பார்த்து வந்த கணக்கர் வேலையே விட்டு வந்து முழுவதுமாக நாடகத்துறையில் பணியாற்றினார். நாடகதுறைக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்த சங்கரதாஸ் சுவாமிகள் 1922ஆம் ஆண்டு நவம்பர் 13ல் காலமானார். இவர் மறைந்தாலும் அவரது வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், இராம ராவண யுத்தம், சத்தியவான் சாவித்திரி போன்ற அவர் தந்த நாடகங்களில் இன்றும் நாடக வடிவில் வாழ்ந்துதான் வருகிறார்.

- Advertisement -

சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை மட்டும் உருவாகாமல் 40க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு பின்னர் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இவரைப்பற்றிய நினைவு கூட்டங்கள் நடத்தப்படும். இப்படியிருக்கும் போதுதான் இன்று சென்னையில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது நினைவு ஊர்வலம் நடத்தப்பட்டு. அந்த ஊர்வலத்தில் இயக்குனரும், நடிகருமான விஜய் ஆண்டனி கூட்டத்தில் கலந்து கொண்டு நாடக கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு நாடக கலைஞர்களை மகிழ்வித்திருந்தார்.

நடிகரும், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” என்ற திரைபடத்தை மூலன் திரையில் அறிமுகமாகினர். பின்னர் நான், சலீம் , இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், டிராபிக் ராமசாமி என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அரசியல் – திரில்லர் திரைப்படமான “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் அவை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படங்களை தவிர்த்து காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மறைந்த நடக்க தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு ஊர்வலத்தில் கலந்து கொண்டு திருநங்கைகளுடன் நடனமாடி மகிழ்வித்தது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதோடு இவர் இந்த ஊர்வலத்தில் ‘bikili’ என்ற உருவ பொம்மையும் இடம்பெற்று இருந்தது. அதாவது தன்னுடைய anti bikil படத்தை இந்த ஊர்வலத்தின் மூலம் விளம்பரபடுத்திகொண்டுள்ளார் விஜய் ஆண்டனி.

Advertisement