உங்களுக்கு அப்புறம் ஒரு ‘நீர் யான’ பவானியா ஆகிடிச்சி – விஜய் சேதுபதி குறித்து கேலியை ஸ்வீட் என்று கமன்ட் அடித்த மாஸ்டர் மகிந்திரேன். அப்புறம் எப்படி எஸ்கேப் ஆனார் பாருங்க.

0
28762
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சாந்தனு, தீனா, ரம்யா, சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, Vj தாரா என்று எத்தனையோ பேர் நடித்தாலும் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இடம் கிடைக்கவில்லை. அதிலும் சாந்தனு, இந்த படம் வருவதற்கு முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கொடுத்த பில்ட்டப்பை பார்த்து பலரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், இவருக்கு கிடைத்தது என்னவோ பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவிற்கு கொடுக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம் தான்.

- Advertisement -

ஆனால், இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிகம் கவனிக்கப்பட்டது மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பு தான். இந்த படத்தில் அவர் குட்டி பாவானியாக நடித்து இருந்தார்.படத்தில் சிரிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் படத்தில் ஒரு அழுத்தமாக இருந்தது. மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி பற்றி மோசமாக கமன்ட் செய்ததை லைக் செய்து வம்பில் சிக்கியுள்ளார் மாஸ்டர் மகேந்திரன், சமீபத்தில் Creator Studio என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடபட்டிருந்த பதிவில் ‘ஒரிஜினல் பவானி மாஸ்டர் மகேந்திரன் ஜெயில்ல விட்டு வரும்பொழுதே செமையா இருந்துச்சி. அப்புறம் ஒரு Hippopotamus பவானியா ஆகிடுச்சி விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் மாதிரி எல்லாருக்கும் வாய்ப்பு கொடுங்க. ஜிகிர்தண்டா வில்லன் சிம்ஹா மாதிரி ‘ என்று குறிப்பிட்டு இருந்தது.

-விளம்பரம்-

தன்னை பற்றி பெருமையாக குறிப்பிடபட்டிருந்த இந்த பதிவால் குஷியான மாஸ்டர் மகேந்திரன், விஜய் சேதுபதி பற்றி மோசமாக கேலி செய்து இருந்ததை பார்க்காமல் சோ ஸ்வீட் பிரதர், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டு விட்டார். பின்னர் சுதாரித்து கொண்டு அந்த பதிவை நீக்கிய மாஸ்டர் மகேந்திரன்,சாரி, அந்த டீவீட்டை நான் சரியா பாக்கல என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement