அட, இந்த மாஸ்டர் பட நடிகர் குழந்தை நட்சத்திரமாக கூட நடித்துள்ளாரா ? யாருன்னு தெரியுதா ?

0
995

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ்.

சினிமா மட்டுமல்லாது இவர் சின்னத்திரையிலும் பிரபலம் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் சஞ்சீவ்.

- Advertisement -

இவர் வனிதாவுக்கு சொந்தக்காரர் கூட என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சஞ்சீவ். ஆனால், இதற்கு முன்பாகவே இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், விஜயகாந்த நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான ‘பொன்மன செல்வன் ‘ படத்தில் சஞ்சீவ், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் கௌடன்மணியின் மகனாக அதாவது நடிகை ஷோபனாவின் தம்பியாக நடித்துள்ளார் சஞ்சீவ். சமீபத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன சஞ்சீவ் இந்த படத்தில் விஜயகாந்துடன், தான் நடித்த காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement