நீ இல்லாமல் நான் எப்படி டா- மனம் உடைந்த நடிகை ரம்யா. வைரலாகும் புகைப்படம்.

0
85633
Vjramya

தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் முதன் முதலாக விஜே வாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

vj-ramya

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த ஆடை என்ற படத்தில் ரம்யா நடித்திருந்தார்.

- Advertisement -

ஆடை படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. மேலும், நடிகை ரம்யா அவர்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அதிலும் ரம்யாவிற்கு நாய்கள் என்றால் உயிர். ரம்யா தன்னுடைய வீட்டில் 2012 ஆம் ஆண்டில் இருந்து மிலோ என்ற ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் விஜே ரம்யா தன்னுடைய செல்லப்பிள்ளை மிலோ காலமானார் என்ற சோகமான செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

பொதுவாகவே சிலபேர் மனிதர்களைவிட செல்லப் பிராணிகள் மீது அதிக அன்பும் பாசமும் வைத்திருப்பார்கள். அதிலும் ஒருசில பேர் பைத்தியக்காரத்தனமான பாசத்தை வைத்து இருப்பார்கள். அந்த பிராணிகளுக்கு என்று என்றால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த பிராணிகள் திடீரென்று இவ்வுலகத்தை விட்டு சென்றால் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப் பெரிய கஷ்டத்தை கொடுக்கும். ஏதோ அவர்களிடமிருந்து பிரிந்து போன மாதிரியே ஒரு உணர்வு ஏற்படும். இதயம் உடைந்து போன மாதிரி இருக்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் நடிகை ரம்யாவும் பாதிக்கப்பட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய உலகமே மிலோ தான். தற்போது உலகமே மிகப்பெரிய தொற்று வைரஸ் உடன் போராடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மிலோவும் மிகவும் கடுமையான நோயுடன் போராடிக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைகள் செய்தும் இறுதியாக மைலோ இன்று காலை இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டான். இதனால் நான் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. எனக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது.

என்னுடைய ஒரு பகுதியில் இருந்து பிரிந்து போன மாதிரி வலிக்கிறது. என் மீது அதிக அன்பை கொடுத்தவன். தற்போது அவனில்லை. மேலும், கடந்த மூன்று வாரங்களாக என் மைலோ குணமடைய பிரார்த்தனை செய்த நண்பர்களுக்கு நன்றி. மைலோ என்னுடைய குழந்தை, செல்லம், உலகம் எல்லாமே. எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது அவன் தான். என்னை பாதுகாத்தது அவன் தான். நான் மிலோவை ஒவ்வொரு தினமும் மிஸ் பண்ணுகிறேன். மீண்டும் உன்னை ஏதோ ஒரு முனையில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜே ரம்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்,விஜய் சேதுபதி முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள்.

Advertisement