லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.அதே போல இந்த படத்தை இந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் கதாபத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : ஸ்கூல் பாப்பா போல ரெட்டை ஜடை, வெள்ளை உடையில் தேவதையாய் லாஸ்லியா நடத்திய புதிய போட்டோ ஷூட்.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த விஜய்யின் ‘மாஸ்டர்’. இதனை #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த, மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் திருநெல்வேலியில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் திரையரங்கிள் மாஸ்டர் படத்தை பார்க்க 5 பேர் மட்டும் தான் இருந்ததாகவும் மாஸ்டர் படம் பிளாப் என்றும் ரஜினி ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ளராம் ராம் முத்தராம் திரையரங்கம், திரையரங்கில் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டீ போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது என்பதை உறுதி செய்துள்ளனர்.