எம்ஜிஆர்- சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிற்காலத்தில் பிரபலமான நடிகர்களாக பல பேர் மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் பிரபாகர். இவரை மாஸ்டர் பிரபாகர் என்று தான் அழைப்பார்கள்.
இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிப் பழங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, தமிழில் சிவாஜி கணேசன்- எம்ஜிஆர் போன்ற பல ஜாம்பவான்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பாமா விஜயம், திருமலை, தென் குமரி, மூன்றெழுத்துப் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பிரபாகர் குறித்த தகவல்:
பின் இவர் வா ராஜா வா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பில் இருந்து விலகிவிட்டார். அதற்கு பின் பிரபாகர் சென்னையில் ஒரு ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார்.
பிரபாகர் செய்யும் தொழில்:
அதுமட்டுமில்லாமல் சென்னையிலேயே கலர் ஜெராக்ஸ் என்ற நிறுவனத்தை முதன் முதலில் அமைத்தவர் பிரபாகர் தான். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பேட்டியளித்து இருந்தார். அதில் அவர், நான் இதுவரை 175 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். கடைசியாக நான் ஈரம் என்ற படத்தில் நடித்து இருந்தேன். நான் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பதினால் அங்கு பல பேர் வருவார்கள். அப்போது என்னை சில பேருக்கு தெரியும், சில பேருக்கு தெரியாமல் இருக்கும்.
பிரபாகர் அளித்த பேட்டி:
அதனால் நான் அவர்களிடம் நான் நடிகன் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. அப்படி என்னை பற்றி தெரிந்தவர்கள் என்னிடம் பேசினால் நானும் பேசுவேன். அப்படி பழக்கமான இயக்குனர் தான் அறிவழகன். அவர் என்னை பற்றி எல்லாம் தெரிந்த பிறகுதான் ஈரம் படத்தில் நடிக்க வைத்தார். ஒருமுறை நான் நடித்த வா ராஜா வா படத்தில் மகாபலிபுரத்தை பற்றி சொல்லி இருப்போம். அப்போது பிஎம் கூட அந்த படத்தை பார்த்து மகாபலிபுரத்தை பற்றி தெரிந்து கொண்டார் என்று கூறினார்கள்.
சினிமா அனுபவம் குறித்து சொன்னது:
அது உண்மையா? பொய்யா? என்று எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரையில் சின்ன கதாபாத்திரம் பெரிய கதாபாத்திரம் என்பதெல்லாம் தெரியாது. குடும்பத்தை காப்பாற்றனும் வாழ்க்கையில் முன்னேறும் இந்த ரெண்டு காரணத்தினால் தான் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்தேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்தநிலையில் தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.