கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் நடிப்பில் அயலான், மாவீரன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிவர்கார்த்திகேயன் , கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்ஸில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கடந்தே ஆண்டே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
sk21 படத்தின் பூஜை :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவர் கெளதம் கார்த்திகை வைத்து ரங்கூன் படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்து. இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
@idiamondbabu @prosathish @UrsVamsiShekar
— Raaj Kamal Films International (@RKFI) May 5, 2023
Promo Music – @JenMartinmusic Promo Lyric –@VishnuEdavan1
ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டி:
அதில் அவர்பேசிய போது, இந்த படத்தில் ஹீரோவாக யாரு போடலாம் என்று பெரிய டிஸ்கஷன் நடந்தது.நான் சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. பின் கமல் சாரிடம் சிவா பெயரை சொன்னதும் அவர் ஏன் இப்படி தயங்கி சொல்றீங்க. ரொம்ப பர்ஃபெக்ட்டான சாய்ஸ். அவர் ரொம்ப ஷார்ப். யார் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
சிவா-கமல் கூட்டணி உருவான விதம்:
நீங்கள் சரியான நபரை பிடித்து விட்டீர்கள். நான் அவரை சந்திக்கிறேன் என்று சொன்னார். கமல் சார் இப்படி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.பின் சிவாவே கமல் சாரை பார்த்து பேசினார். பின் சோனி நிறுவனத்திடம் இதைப் பற்றி சொன்னதும் அவர்களும் ஹாப்பி ஆகிவிட்டார்கள். இப்படி தான் இந்த படம் ஆரம்பமானது. கூடிய விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கி படப்பிடிப்புகள் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
Skவுக்கு கிடைத்த கவுரவம் :
பொதுவாகவே கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது தான் படங்களை தயாரிப்பார்.இதற்கு முன்பு 1987இல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் சத்யராஜ், 2003இல் நள தமயந்தி என்ற படத்தில் மாதவன், 2019ல் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் போன்றவர்கள் கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் நடித்துள்ளனர். இப்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.