விக்ரம் படத்தை பார்த்துவிட்டு அவ்வை ஷண்முகி மேக்கப் மேனின் மகள் போட்ட பதிவு – அட, இவங்க ஹாலிவுட் நடிகையா.

0
251
avvai
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் விக்ரம் படம் குறித்து அவ்வை ஷண்முகி பட பிரபலத்தின் மகள் போட்டு இருக்கும் பதிவு பெரும் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பல்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் கமல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது. அதேபோல இந்த படத்திற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற அனைத்து படங்களும் வெற்றி பெற்றிருந்தது.

-விளம்பரம்-
vikram

இதனால் லோகேஷ் கனகராஜ் மீதும் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறது. தனது படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் கமல், லோகேஷ் கனகராஜூக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை அளித்திருந்தார். அதோடு இந்த படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசாக அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : ‘அட கண்றாவியே எப்படி இருந்த மனுஷன் எப்படி ஆகிட்டாரு’ – நெல்சனின் பேச்சை கேட்டு வருத்தப்படும் ரசிகர்கள். வீடியோ இதோ.

- Advertisement -

பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :

மேலும், இந்த படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் இறுதிநேரத்தில் ரசிகர்களின் கரகோஷத்தால் திரையரங்குகளை மூழ்க வைத்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் ஒன்றை பரிசாக அளித்திருந்தார் கமல். விக்ரம் திரைப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது இந்த படத்தை பல்வேறு பிரபலங்களும் பாராட்டி தள்ளி வருகிறார்கள். மிகவும் பெருமையாக இருக்கிறது.

அவ்வை ஷண்முகி மேக்கப் மேன் :

அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த அவ்வை சண்முகி படத்தில் மேக்கப் மேனாக பணியாற்றிய மைக்கல் வெஸ்ட்மோரின் மகள் இந்த படம் குறித்து போட்டிருக்கும் பதிவு பெரும் வைரலாகி வருகிறது. “அவ்வை சண்முகி” படத்தில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டவர் மைக்கல் வெஸ்ட்மோர். இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

குவியும் பிரபலங்களின் வாழ்த்து :

அதோடு பல பிரபலமான நடிகர்கள் எல்லாருக்கும் இவர் தான் மேக்கப் செய்து உள்ளார். இவர் தன்னுடைய மேக்கப் திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவரது மகள் மெக்கென்ஸி. இவர் ஹாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஃபேஷன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஷெரிடன் கிரேன் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வெஸ்ட்மோர் போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘விக்ரம் கர்ஜிக்கும் வெற்றி பெற்று இருக்கிறது. விக்ரம்மின் ஆக்ஷன். என்றும் அன்புடன் வெஸ்ட்மோர்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement