நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.
https://twitter.com/indulgexpress/status/1391693683376857092
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் தமிழில் அ ஆ, மருதமலை போன்ற படங்களில் நடித்த நடிகை மீரா சோப்ராவின் உறவினர்கள் இருவர் கொரோனா தொற்றால் காலமாகி இருந்ததனர்.
இதையும் பாருங்க : இன்னமும் வாடகை வீடு தான், வடிவேலு இல்லாததால யாரும் வாய்ப்பு குடுக்க மாற்றங்க - வேதனையில் வெங்கல் ராவ்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் "என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் மரணமடைந்துவிட்டனர். இது கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் அல்ல; நம்முடைய தோற்றுப்போன மருத்துவக் கட்டமைப்பினால் செய்யப்பட்ட கொலை. நம் நாட்டில் மட்டும்தான் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். நிலைமை அச்சுறுத்துகிறது" என்று பதிவிட்டு இருந்தார். மீரா சோப்ராவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
https://twitter.com/MeerraChopra/status/1393424134902673408
நடிகை மீரா சோப்ராவின் மறைந்த உறவினர்களில் ஒருவர், இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதும், மற்றொருவர் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் எனக்கு மருத்துவமனையில் பெட் கிடைக்கவில்லை நான் வாழ்வதர்க்கு ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை என்ற போது நான் 18 % Gst வரியை செலுத்த விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.





