இன்னமும் வாடகை வீடு தான், வடிவேலு இல்லாததால யாரும் வாய்ப்பு குடுக்க மாற்றங்க – வேதனையில் வெங்கல் ராவ்.

0
77880
vengal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.வடிவேலு சினிமாவில் இருந்து காணமல் போனதற்கு காரணமும் கேப்டன் தான்.

-விளம்பரம்-

பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார். இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.வடிவேலு படங்களில் நடிக்காமல் போனதில் இருந்து அவருடன் நடித்த பல நடிகர்களும் தற்போது வாய்ப்பு இல்லாமல் தான் தவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வெங்கல் ராவ்.

இதையும் பாருங்க : அடங்கப்பா, கனிக்கு இவ்ளோ பெரிய மகள்களா ? ரெண்டு பெரும் ட்வின்ஸ்ஸா. ஒரே மாதிரி இருக்காங்களே.

- Advertisement -

வெங்கல் ராவ், ஆந்திராவை சேர்ந்தவர். தன் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடத்தை ஃபைட் மாஸ்டராக இருந்து கடத்தியவர். ‘நீ மட்டும்’ படம் முதல் நகைச்சுவை நடிகரானார். சினிமாவிற்கு வரும் முன்னர் இவர் கோவில் திருவிழாக்களில் கம்பு சுற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டினார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் சண்டை கலைஞ்சராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் வாங்கிய சம்பளம் 150 ரூபாய் தான்.

பின்னர் 25 ஆண்டுகள் பைட் மாஸ்டராக இருந்த இவர் பின்னர் உடல் ஒத்துழைக்காததால் நடிப்பு பக்கம் வந்துவிட்டார். நடிகராக இவரது முதல் படம் ‘நீ மட்டும்’ என்ற படம் இதில் இவர் வடிவேலுவுடன் நடித்து இருப்பார். அதன் பின்னர் இவருக்கு வடிவேலு பல படங்களில் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தாராம். வடிவேலு தான் என்னை ஒரு நடிகர் ஆக்கியது. அவரால் தான் நான் சோறு சாப்பிடுறேன். ஆனால், இப்போ அவரு இல்லாததால எங்களை யாரும் நடிக்க கூப்பிடறது இல்லை என்று வருத்தமோடு தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சென்னையில வாடகை வீட்டுலதான் இருக்கேன். இதுக்குமேல காரு, பங்களாலாம் கேட்கல. மூணு வேலை சாப்பாடு, அடிப்படை தேவைக்கு என்ன தேவையோ அதுக்கு சம்பாதிச்சா போதும். எனக்கு ஒரு பையன், பொண்ணுங்க. பையன் இறந்துடுச்சு. பொண்ண பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வச்சு ஒரு எடத்துல கட்டி வச்சேன். பொண்ண கட்டிக் கொடுத்த எடம் சரியில்ல. இப்போ கிட்டத்தட்ட இருபத்து எட்டு வருடமா என் பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி, பேரன் வரைக்கும் நான் தான் சோறு போட்டுட்டு இருக்கேன்.

பேரன் பேத்தி இரண்டு பேரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சுட்டேன். என் பேத்திக்கு 25 பவுன் போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். நல்லா இருக்காங்க. பேரன் வேலை தேடிட்டு இருக்காங்க. ஆந்திராவுல வீடு கட்டிட்டேன். அதனால கடனாகிடுச்சு. அதைக் கட்டத்தான் இப்போ இன்னும் தீவிரமா உழைச்சுட்டு இருக்கேன். எவ்வளவு  கஷ்டப்படுறமோ அவ்வளவு நல்லது கிடைக்கும்.

Advertisement