இணையத்தில் அந்தரங்க புகைப்படங்கள்.! போலீசில் புகார் அளித்த மீரா மிதுன்.!

0
1014
meera mithun

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார். 

meera

போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மீரா மிதுன் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக வேலை செய்து வந்தார். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் நடித்திருந்தார். 8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

- Advertisement -

மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. இந்த நிலையில் மிஸ் தமிழ்நாடு டிவா 2019 என்ற அழகிப் போட்டியை வடபழனியில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

meera

ஆனால், அழகிப் போட்டியை தான் நடத்தக் கூடாது என்று அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவர் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். போலீசாரும் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள மீரா மிதுன், தனது செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடியுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement