இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – முன்னாள் முதல்வரின் பேரனுடனான திருமணத்தை நிறுத்திய பட்டாஸ் பட நடிகை.

0
1269
mahreen pirzada
- Advertisement -

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பட்டாஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தனுஷ், சினேகா,நாசர், இளவரசு, மனோ பாலா என்று ரசிங்கர்களுக்கு பரிட்சயமான பலர் நடித்த இந்த படத்தில் இந்த படத்தில் தனுஷ் அவர்கள் ஒரு திருடனாகவும், வீர கலைஞராகவும் இரண்டு வேடத்தில் நடித்துஇருந்தார். அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார் . புதுப்பேட்டை படத்துக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் – சினேகா ஜோடி இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் தமிழகர்களின் மறக்கப்பட்ட தற்காப்பு கலையான அடிமுறை என்ற தற்காப்பு கலை குறித்து கூறி இருந்தனர். இந்த படத்தில் அப்பா தனுஷ் ஜோடியாக ஸ்னேகாவும் மகன் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ஜோடியாக மெஹ்ரின் பிர்சடா என்பவர் நடித்திருந்தார். இவர் தமிழுக்கு ஒன்றும் புது முகம் கிடையாது. இவர் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : படு கிளாமர் ஐஸ்வர்யா தத்தா நடத்திய போட்டோ ஷூட் – யாஷிகாவுக்கு டப் கொடுக்குறாங்களே.

- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்த இளம் நடிகை ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.அதன் பின்னர் தெலுங்கில் 2016 ஆம் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2017 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தான்.

பட்டாஸ் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இப்படி ஒரு நிலையில் பவ்யா பிஷ்னோவை திருமணம் செய்ய போவது இல்லை என்றும் தனக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement