தளபதி 66ல் Dual Roleல் விஜய் – ஒரு ஜோடி ராஷ்மிகா, இன்னோரு ஜோடி இந்த தனுஷ் பட நடிகை தானாம். யார் தெரியுமா ?

0
637
vijay
- Advertisement -

ராஷ்மிகாவை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக இணைந்து இருக்கிறார் மற்றொரு நடிகை. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-577.jpg

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

விஜய் 67 படத்தின் இயக்குனர்:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

டபுள் ரோலில் விஜய் :

இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா கமிட் ஆன நிலையில் இன்னொரு ஜோடி யார் என்ற கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்த Mehreen Pirzada கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால். ராஷ்மிகாவிற்கும் 26 வயது தான் இவருக்கும் 26 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியான மெஹ்ரின் பிர்சடா :

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்த இளம் நடிகை ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் தெலுங்கில் 2016 ஆம் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2017 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்திற்கு பின் நோட்டா படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களை விட ‘பட்டாஸ்’ திரைப்படம் தான் இவருக்கு தமிழில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

Advertisement