சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.
மெட்டி ஒலி தொடர் :
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.
இதையும் பாருங்க : 13 வருடங்களுக்கு பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் மோகன் – புத்தாண்டில் வெளியான வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
உமா அக்கா வனஜா :
இந்த தொடரில் விஜி மற்றும் லீலா என்ற கதாபத்திரத்தில் அக்கா தங்கையாக நடித்த உமா மற்றும் வனஜா இருவரும் நிஜத்திலும் அக்கா தங்கைகள் தான். இதில் வனஜா, விஜய் தொலைக்காட்சியில் மூலமாகத் தான் இவர் சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் வனஜா நடித்திருக்கிறார். மேலும், இவருடைய தங்கை மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமாமகேஸ்வரி.
உயிரை பிரித்த மஞ்ச காமாலை :
இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் உமா உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இவருடைய இறப்பு குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் வந்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து உமாவின் அக்கா வனஜா அவருடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது ‘ அவளுடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக தான் இருந்தது.
குழந்தை இல்லாததால் பிரச்சனையா :
ஆனால், குழந்தை இல்லை என்கிற வருத்தம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது. குழந்தைக்காக அவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனையும் செய்தார்கள். ஆனால், எந்த பிரச்சனை இல்லை என்பதும் தெரிந்தது. இருந்தாலும் இரண்டு பேருமே சந்தோஷமாக தான் அவர்களுடைய வாழ்க்கையை நடத்தினார்கள். அவள் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய வாழ்க்கையும் அமைந்தது. அவளுக்கு இருந்த மஞ்சகாமலை பிரச்சனை எல்லோருக்கும் தெரியும்.
இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் :
அதற்காக அவள் டிரீட்மென்ட் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால். பின் அது குணமாகிவிட்டது. இருந்தாலும் அது அவளுடைய உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. மேலும், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் உடம்பெல்லாம் சரியாகி விட்டது. அதனால் பல இடங்களுக்கு டிராவல் பண்ணனும் என்று சொல்லியிருந்தார். ஆனால், கடவுள் அவளை சீக்கிரமா கூட்டிட்டு போயிட்டாரு. என் கண் முன்னாடியே அவள் இருப்பாள் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்று கூறி இருந்தார் வனஜா.