கிளாமராக நடிப்பீங்களா என்ற கேள்விக்கு பிரியா பவானி ஷங்கரின் பதில் இதான்.!

0
1019
a-bhavani-shnakar
- Advertisement -

என் வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக நடந்ததுதான். ஆனால், நடப்பவை எல்லாவற்றினாலும் மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றேன்” என மகிழ்ச்சி பொங்கப் பேச ஆறாம்,ஆரம்பித்தார் ” முதல் படத்திலேயே முத்திரை பதித்த ‘மேயாதமான்’ படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர். 

-விளம்பரம்-

சீரியலில் நடிக்கும்போது, சினிமாவில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஏன்னா, இந்த சீரியல் பண்ணும் போதே என்னைத் தேடி நல்ல படங்களின் வாய்ப்பு எல்லாம் வந்தது. அதனால் சில வாய்ப்புகளைத் தவிர்த்தேன்.’நாம ஹீரோயினா நடிச்சியிருக்கலாமே’னு தோணுச்சு. ஏன்னா, சின்னத்திரையில் இருக்கும் பலர் பெரிய திரைக்கு முயற்சி பண்ணும்போது, நாம ஏன் வந்த வாய்ப்புகளை மறுக்கணும்? அதனால, சினிமாவிலும் நடிக்கலாம் என முடிவு செய்தேன். 

இதையும் படியுங்க : பிரியா பவானி ஷங்கரின் காதலன்.! ரகசியத்தை போட்டுடைத்த எஸ் ஜே சூர்யா.! 

- Advertisement -

அப்போதுதான், ‘மேயாதமான்’ படத்தின் கதை என்னைத் தேடி வந்தது. படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் என்றதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. ஏன்னா, கார்த்திக் சுப்புராஜ் திறமையான இயக்குநர். நல்ல படங்களைத் தரக்கூடியவர். அவரே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, அதில் விஷயம் இல்லாமல் இருக்காது. தவிர, இயக்குநர் ரத்னகுமார் குறும்பட இயக்குநராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்படிப் பல பாஸிட்டிவ் பாயின்ட்ஸ் இருந்ததால், கதையைக் கேட்டதுமே சம்மதித்துவிட்டேன். 

மேயாதமான்’ படத்தை மக்களுடன் திரையில் பார்த்தேன். ஏற்கெனவே என்னை எல்லோருக்கும் தெரியும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி நான் நடிக்கப் போகும் படங்களையும் என் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி செலக்ட் பண்ணி நடிப்பேன். அதே நேரத்தில் ரொம்ப கிளாமராக நடிக்க மாட்டேன். என்னை ரசிகர்களுக்குப் பிடிக்கக் காரணமே நான் ஹோம்லியாக இருப்பதுதான். அதுனால கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு சொல்ல என்கிட்ட இருக்கிற ஒரே பதில்…‘நோ’. நடிகர்களில் எனக்கு மாதவனைப் பிடிக்கும். அவரோடு சேர்ந்து நடிச்சா, நல்லா இருக்கும்” எனச் சிரிக்கிறார், பிரியா பவானி சங்கர். 

-விளம்பரம்-
Advertisement