பிக் பாஸ் 3யில் மாற்றம்.! அடுத்த சீசனை தொகுத்து வழங்க போவது இவர் தான்.!

0
490
Bigg-Boss

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தெலுங்கில் இரண்டு சீசன்கள் இதுவரை முடிந்துள்ளது.
தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது.

இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர். ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர்.

ஆனால், முதல் சீசனில் என் டி ஆர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டுசென்றது போல நானியால் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பாயிண்ட்ஸ் ரீதியாக சானல் ஆட்டம் கண்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 க்காக இப்போதே ஜூனியர் NTR ரிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.