அந்த புத்தகத்தை படித்து 40 ஆண்டு ஆகிடிச்சி, 4 முறை எடுக்க Try பண்ணிட்டேன், MGR ஆல் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம்.

0
467
maniratnam
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் கூறியிருக்கும் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஹாலிவுட் நடிகையை கூட விட்டு வைக்காத தனுஷ் – புகைப்படத்தை கண்டு புலம்பும் நெட்டிசன்கள்.

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இருக்கிறது.

டீசர் வெளியீட்டு விழா:

படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழாவில் இயக்குனர் மணிரத்தினம் கூறியிருந்தது, என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு. நான் காலேஜ் படிக்கும் போது இந்த புத்தகத்தை படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் இது என் மனதை விட்டு போகவில்லை. இது மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்துக்குப்பிறகு அவர் பண்ண வேண்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

விழாவில் மணிரத்தினம் கூறியது:

அவர் இப்படத்தை எங்களுக்குத்தான் விட்டு வைத்தார் என்பது இன்று தான் எனக்கு புரிந்தது. இது பலரின் கனவு. பலர் இதை படமாக்க முயற்சி செய்துள்ளார்கள். நானே 1980, 2000, 2010 என மூன்று முறை முயற்சி செய்துள்ளேன். எனவே எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பது எனக்கு தெரியும். இப்போது இதை செய்து முடித்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இதை செய்து முடிக்க ஏ ஆர் ரகுமான், ரவிவர்மன் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லோரும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் பாதுகாப்பு உடைகளுடன் வந்து நடித்துக் கொடுத்தார்கள். இப்படி பல்வேறு சிரமங்களுடன் இந்த படத்தில் என்னுடன் வேலை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement