மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த கமல் – வைரமுத்து பஞ்சாயத்தை இழுத்த சின்மயி

0
1434
- Advertisement -

டெல்லியில் நடைப்பெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து கமல் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது கமலின் அந்த பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் டெல்லியில் நடைப்பெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து கமல் பதிவிலும் சின்மயி, வைரமுத்து பஞ்சாயத்தை இழுத்துள்ளார்.

- Advertisement -

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கமல் பதிவு ஒன்றை போட்டுஇருந்தார். அதில் ‘மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்களை நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக போராட வைக்க வேண்டிய நாம், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்து விட்டோம். இந்தியர்களே, நாம் யார் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்?

நம் நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீதா? அல்லது அதிக  குற்ற பின்னணி கொண்ட ஒரு அரசியல் வாதியின் மீதா?” என்று இந்தியர்களுக்கு ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார் கமல். மேலும், “நான் எனது சாம்பியன்களுக்கு துணை நிற்கிறேன் (#IStandWithMyChampions) என்ற ஹேஷ்டேக்கையும் கமல் தனது பதிவுடன் இணைத்துள்ளார். கமலின் இந்த பதிவிற்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கமலின் இந்த பதிவில் வைரமுத்து விவகாரம் குறித்து பதிவிட்டு இருக்கும் சின்மயி ‘ தமிழ்நாட்டு பாடகர் ஒருவர் கண்ணெதிரே ஒரு துஷ்பிரயோகம் செய்பவரின் பெயரைச் சொன்னதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார், கவிஞருக்கு அவர்களின் மரியாதை இருப்பதால் அதைப் பற்றி பேசவில்லை. பெண்களின் பாதுகாப்பிற்காக பேசும் அரசியல்வாதிகளை எப்படி நம்புவது, அவர்கள் தங்கள் கண் முன்னே நாடாகும் துன்புறுத்தலை புறக்கணிக்கிறார்கள்?

இல்ல சும்மா தான் கேக்குறேன், இப்போது என் டைம்லைன் தவறான வார்த்தைகளால் வெடிக்கும். ராதா ரவி பயன்படுத்திய போலி டத்தோ தலைப்பு உட்பட 5 ஆண்டுகளாக நான் விசாரித்து வருகிறேன், இது மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் கூட புகார் செய்யப்பட்டது. இந்த கட்டத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதை நிறுத்துங்கள். இதெற்கெல்லாம் மேல் எப்போதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறீர்களா? அது எவ்வளவு தூரம் போகும் என்று உங்களுக்கு தெரியவில்லையா? என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement