அட கொடுமையே, எஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்.

0
2796
spb
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அவரது இறுதி சடங்கின் போது திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர். எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

- Advertisement -

இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்படி ஒரு எஸ் பி பியின் இறுதி சடங்கு நடந்த இடத்தில் ஏராளமான கூட்டம் கூட்டியிருந்தது. அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன் உள்பட 5 நபர்களின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களின் செல்போன் உள்ளிட்ட இறுதி அஞ்சலியில் பங்கேற்க வந்தவர்களிடம் கைவரிசையை காட்டியதாக‌ சந்தேகத்தின் பெயரில் 12 பேரை‌ பிடித்து வெங்கல் காவல்துறை‌ விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி சடங்கில் திருட்டு வெளியை பார்த்துள்ள அந்த நபர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement