தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
மோகன் இயக்கிய திரௌபதி படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஷீலா நடித்து இருந்தார். திரௌபதி படத்திற்கு பின்னர் ஷீலா, மண்டேலா, ஜோதி போன்ற படங்களில் நடித்து உள்ளார். அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘பேட்டக்காளி’ வெப் தொடரிலும் ஷீலா நடித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷீலா, முழு கதையும் என்னிடம் சொல்லப்படவில்லை. இயக்குனர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருப்பேன். என்னுடைய வேலையை என்னிடம் தெளிவாகக் கூறினால் அதை செய்யாலாமா? வேண்டாமா? என்ற முடிவை நான் எடுப்பேன். திரௌபதி படத்தை எனக்கு மிகப்பெரிய பாடமாக பார்க்கிறேன் என்று பேசியிருந்தார்.
#Mohang Replied To #Sheela pic.twitter.com/mrcmIzvkRf
— chettyrajubhai (@chettyrajubhai) February 19, 2023
இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து முழு கதையை கூறாமல் ஏமாற்றி நடிகையை நடிக்க வைத்து விட்டாராம் மோகன் ஜி என்ற கேள்வி எழுப்பி வந்தனர். இப்பட ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன், அந்த பெண் ஒன்றும் அப்பாவி இல்லை மிகவும் திறமையான பெண் தான். அவர் முழு கதையை கேட்டு தான் நடித்தார். ஆனால், அவங்க தனிப்பட்ட வாழ்வில் இருந்த பிரச்னைகயால் அவர் இப்படி பேசிவிட்டார். அந்த காரணத்தை நான் கேமரா முன் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.