இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு – மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு வந்த பிரபல டிவி நடிகை

0
1744
mohina
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் இந்த கரோனா வைரஸ் கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியாவில் 343091 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 9900பேர் கொரோனவால் பலியாகி உள்ளார்கள். 180013 பேர் கொரோனவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்தாலும் அதேபோல் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

-விளம்பரம்-
Mohena KS

covid -19 சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் தாக்கி கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரபல இந்தி சீரியல் நடிகை மோகன குமாரி சிங் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தனக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

- Advertisement -

அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிக்சை பெற்று வீடு திரும்பிய நடிகை மோகன குமாரி சிங் அவர்கள் தனுக்கு இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து நடிகை மோகன குமாரி சிங் அவர்கள் கூறியது, தனக்கும்,தன் குடும்பத்தாருக்கும் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அதன் காரணமாக நாங்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கிறோம். தற்போது உடல் நிலை கொஞ்சம் சரியாகி உள்ளது. ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement