மௌன ராகம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகர் – இன்று முதல் இவர் தான். யார் பாருங்க.

0
5701
mouna
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுக்கும் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் கொரோனா லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் சில மாதம் கழித்து மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது. மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான் கதைக்களத்துடன் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலின் நடிகர் ஒருவரை மாற்றம் செய்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே அடிக்கடி நடிகர்களை மாற்றுவது வழக்கமான ஒன்று. ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக ஒரு சில நடிகர்கள் சீரியலில் கடைசி வரையும் நடிக்க முடியாமல் போகின்றது.

இதையும் பாருங்க : படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அடி, 20 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் பாரதி ராஜா பட நடிகர்.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் தான் ஏமாற்றம் அடைகிறார்கள். அதிலும் ஒரு சில சமயத்தில் சீரியலில் ஹீரோ ஹீரோயின் கூட மாற்றுவார்கள். அதனால் அந்த சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் போய்விடும். இந்த நிலையில் தற்போது மௌனராகம் சீசன் 2 சீரியலில் வருன்-தருண் ஆகிய ஹீரோக்களின் தந்தை வேடத்தில் நடிக்கும் நடிகரை தான் மாற்றம் செய்துள்ளார்கள். அதாவது மகேஸ்வரனுக்கு பதிலாக இப்போது கேகே மேனன் என்பவர் நடிக்க இருக்கிறார்.

இதை புதிதாக அப்பா வேடத்தில் நடிக்கும் கேகே மேனன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதை பார்த்த மௌனராகம் 2 சீரியல் ரசிகர்கள் ஏன் வருண்-தருண் அப்பா சீரியல் இருந்து விலகி விட்டார்? என்ன காரணம்? என்று பல விமர்சனங்களை கேட்டு வருகின்றனர். மேலும், அவர் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்று இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement