இந்த சம்பவத்தால்தான் என் தலை வழுக்கையானது ! ராஜேந்திரன் முடியை இழந்த காரணம் !

0
5797
Motta-rajendiran
- Advertisement -

தற்போது நாம் பார்க்கும் மொட்டை ராஜேந்திரன் ஒரு கொடூர வில்லனாக, செம்மையாக சிரிக்க வைக்கும் காமெடியனாக தான் நமக்கு தெரியும். ஆனால், இந்த இடத்திற்கு வரும் முன்னர் அவர் என்ன என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? அவருக்கு தலையில் முடி இல்லாமல், ஏன் மொட்டை ராஜேந்திரன் ஆனார் தெரியுமா?
RAJENDRAN
இன்னும் பல தகவல்கள் கீழே :

-விளம்பரம்-

1.ராஜேந்திரன் தற்போது தான் காமெடி மற்றும் வில்லன் ரோலில் கலக்கி வருகிறார். இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மேனாக இருந்துள்ளார்.

- Advertisement -

2.கடந்த பல வருங்களுக்கு முன்னர் அவருடைய இளமை காலத்தில், ஒரு மலையாலப் படத்தில் ஸ்டண்ட் மேனாக இருந்தார். அந்த படத்தில் ஸ்டண்ட் செய்யும் போது கல்பெட்டா என்ற இடத்தில் ஒரு கெமிக்கல் கலக்கப்பட்ட குளத்தில் விழுந்து விட்டர். அப்போது கொட்டிய முடி, அதன் பின்னர் வளரவே இல்லை இதனால் தான் இன்னும் மொட்டையாக இருக்கிறார்.
Actor Rajendran3.ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார் ராஜேந்திரன்.

4.அவர் முதன்முதலில் வில்லனாக நடித்த பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த வில்லன் விருது இவருக்கு கிடைத்தது.

-விளம்பரம்-

5.ராஜேந்திரனுடைய அப்பாவும் ஸ்டண்ட் மேனாக தான் இருந்தார். அவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்காக 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் செய்துள்ளார்.

6.வேதாளம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் முன்பே, அவருடைய ஆசை மற்றும் ஏகன் ஆகிய படங்களில் அசிஸ்டண்ட் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்துள்ளார் ராஜேந்திரன்.

7.தொடர்ந்து ஸ்டண்ட் மட்டுமே செய்து வந்த ராஜேந்திரன் முதன் முதலில் பிதாமகன் படத்தில்தான் நடிக்க ஆரம்பித்தார்.
motta rajendran8.கோலிவுட்டில் அவருக்கு பிடித்த நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

9.இவர் தமிழ் சினிமாவின் மிகத் திறமை வாய்ந்த ஸ்டண்ட் மாஸ்டர்களான பெப்சி விஜயன், ஸ்டண்ட் சிவா ஆகியோருக்கு எல்லாம் அசிஸ்டண்டாக வேலை செய்துள்ளார்.

10.பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் மூலமாகதான், மொட்டை ராஜேந்திரன் நல்ல காமெடி நடிகராக வந்தார்.

Advertisement