சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகரின் மகன்! புகைப்படம் உள்ளே ?

0
1528
adithya

படத்திற்கு படம் வித்யாசம் காட்டி வரும் விஜய் சேதுபதி தற்போது ‘ஜூங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர், வேறு யாரும் இல்லை ‘இதற்க்குத் தானா ஆசைபட்டாய் பாலாகுமாரா’ படத்தின் இயக்குனர் ‘கோகுல்’ தான். இதனால் பத்தில் மாஸ் மற்றும் காமெடி சீன்களுக்கு பஞ்சமிருக்காது என்பது உண்மை.
Vijay Sethupathiஇதற்கு அடுத்து, ’96’ என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி, இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பிரேம் குமார் செய்து வருகிறார். முன்னர், வந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

இதையும் படிங்க: விஜய் 62- ல்! எத்தனை விஜய், என்ன கதாபாத்திரம், என்ன கதைனு தெரியுமா ? அசத்தும் முருகதாஸ்

இந்த படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான வயதான கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடிக்க குணச்சித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மகன் ‘ஆதித்யா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
adithya மேலும், படத்தில் திரிஷாவும் நடிக்கிறார், இவரின் பள்ளிக்கால கேரக்டரில் நடிக்க ஒரு நடிகை தேடிக்கொண்டிருக்கிறது படக்குழு. படம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படமானதால், பெரிதாக வடமாநிலங்களில் 30க்கும் அதிகமான இடங்களில் ஷூட்டிங் செய்து வருகின்றனர்.