விஜய் 62- ல்! எத்தனை விஜய், என்ன கதாபாத்திரம், என்ன கதைனு தெரியுமா ? அசத்தும் முருகதாஸ்

0
2517
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் அடுத்து வரவுள்ள படங்களில் அதிக ஹைப்புடன் உள்ளது விஜய்-62 தான். ஏனெனில் விஜய் தனது ஃபேவரட் இயக்குனர் முருகதாசுடன் இணைந்துள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இன்னும் படத்தின் ஷூட்டிங் கூட துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
vijayகத்தி படத்தினைப் போலவே இந்த படத்திலும் இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், படத்தில் ஒரு விஜய் மாற்றுத்திறனாளியாகவும் மற்றொரு விஜய் விவசாயியாகவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தில் மேலும், ஒரு விவசாயிகளின் பிரச்சனையை பற்றி பேசவுள்ளதாகத் தெரிகிறது.

விவசாயிகள் எவ்வாறு புறக்கணிப்படிகிறார்கள், அவர்களின் தற்போதைய இந்த நிலையின் காரணம் யார், என பலவற்றைப் பேசவுள்ளார் விஜய். இப்படத்தில் சமீபத்திய பிரச்சனையான ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை பற்றிய படமாக அமையும் எனத் தெரிகிறது.
vijay

இதையும் படிங்க: விஜய்யின் திறமை ஹாலிவுட்டில் தெரிய நேரம் வந்துவிட்டது – பிரபல தொகுப்பாளி

- Advertisement -

பெரும் அரசியல் பின்புலம் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு வழக்கமான விஜய் படங்களுக்கு வரும் பிரச்சனைகளைப் போல் ஏதாவது வந்தாஅல் தைரியமாக நிற்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement