முந்தானை முடிச்சி படத்தில் வந்த வீடு, ஷூட்டிங் முடிந்ததும் பள்ளிக்கூடம் – தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரசிய தகவல்

0
1778
Mundanai
- Advertisement -

முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். அதேபோல் பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

- Advertisement -

பாக்யராஜ் திரைப்பயணம்:

பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், பாக்யராஜ் அவர்கள் தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் பாக்யராஜ் படத்தை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியராஜ் அவர்கள் தன் மகனுடன் இணைந்து புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

கடைசியாக இவர் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போதும் இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் இடம் பெற்ற வீடு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வருகிறது. பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தன்னுடைய மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் பாக்கியராஜ் கிராமத்திற்கு டீச்சராக வருகிறார். அப்போது ஊர்வசி பாக்யராஜை காதலிக்கிறார். பின் தில்லாலங்கடி வேலை செய்து ஊர்வசி பாக்கியராஜை திருமணம் செய்து கொள்கிறார். அதற்குப்பின் ஊர்வசியின் நிலைமை என்ன? குழந்தை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் பாக்யராஜின் திரைப்படத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற வீடு குறித்து ஒரு சுவாரசியமான தகவலை தான் ஏவிஎம் அருணா குகன் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

படத்தில் இருந்த வீட்டின் நிலைமை:

அதில் அவர், முந்தானை முடிச்சு திரைப்படத்தில் முக்கியமான காட்சிகள் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள ஓலை பாளையம் கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்தவுடன் நாங்கள் பயன்படுத்திய வீட்டை அருகில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு கொடுத்து விட்டோம். தற்போது அந்த வீடு வகுப்பறையாக மாறி இருக்கிறது. அந்த படத்தில் அந்த பகுதி மக்கள் சிலரையும் பாக்கியராஜ் நடிக்க வைத்திருந்தார். 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 25 வாரங்கள் ஓடி நான்கு கோடி வசூலை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement