ஜி பி பிரகாஷ் இசையில் வெளிவந்த பாடல் தன்னுடைய பாடல் தான் என்று நாட்டுப்புற கலைஞர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை .ஒரு படம் வெற்றி பெறும்போது இயக்குநர்கள் நடிகர்கள் டெக்னீசியன்கள் என அடுத்தடுத்த லெவலுக்கு மேலேறி போய் விடுவார்கள். தன் முதல் படத்துல கவனம் பெற்ற துணைநடிகள் அதன்பின்பு வாய்ப்பு கிடைக்காமலோ அல்லது எப்படிஅணுகுவது என தெரியாமல் தேங்கிவிடுவது வழக்கம்.
கிராமத்து வாழ்வியலை அப்படியே அச்சு பிசறாமல் குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த மதயானைக்கூட்டம் திரைப்படம் ஆகும், படம் வெளியான காலத்தில கவனம் பெறாமல் போனாலும் இன்றும் இத்திரைப்படம் ஒரு கிளாசிக் லிஸ்ட்டிலே இருக்கிறது. ஆனாலும் அதன் இயக்குநருக்கு அடுத்த படமான , சமீபத்தில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ராவணக்கோட்டம் கிடைப்பதற்கே நீண்ட இடைவெளி தேவைப்பட்டது,
மதயானைக்கூட்டம் திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு மறக்க முடியாத திரைப்படம் ஆகும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் . பரியேறும் பெருமாள் கதிருக்கு இது தான் முதல் படம். ஆடுகளம் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக இருந்த விக்ரம் சுகுமாறனுக்கும் இதுவே முதல்படம், இப்படி பல அறிமுகங்கள் இருந்தாலும் படம் தொடங்குவதே ஒரு தெம்மாங்கௌ ஓப்பாரிப்பாடலுடனே துவங்கும்.
அந்த பாடலில் நடித்திருந்த கருமாத்தூர் கோமாளி பூமிராஜன் பேட்டி புஹாரி ஜங்சன் என்கிற யூடியூபில் சமீபத்தில் வெளியாகி இருந்தது.இந்த படத்துல இடம்பெற்ற சூப்பர் ஹிட் அடித்த .கோணகொண்டக்காரி, உன்னை வணங்காத நாள் இல்லை பாடல்களை கருமாத்தூர் கோமாளி பூமிராஜனின் மெட்டையே பயன்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார். 40 வருடங்களாக கிராமிய கலைஞராக இயங்கினாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின் சினிமாவுக்கான முதல் வாய்ப்பை க/பெ ரணாசிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் விருமாண்டி மூலமாகவே மதயானைக்கூட்டம் படத்திற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும். அதில் இடம்பெற்ற கோணாக்கொண்டக்காரி பாடலுக்கு இவரின் மெட்டுக்கேற்ப பாடலாசிரியர் வேறு வரிகளை எழுதியதாகாவும் ஆனால் இதே மெட்டையே இசையாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது