போன வெள்ளிகிழமை அவர பார்த்து இத சொல்லிட்டு வந்தேன் – பங்காரு அடிகளார் இறப்பு குறித்து வெளிநாட்டில் இருந்து தேவா வெளியிட்ட வீடியோ.

0
267
- Advertisement -

பங்காரு அடிகளார் மறைவிற்கு இசையமைப்பாளர் தேவா பதிவிட்டு இருக்கும் இரங்கல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று மேல்மருவத்தூர் அம்மன். தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த மேல்மருவத்தூர் அம்மன் புகழ் பெற்றிருக்கிறார். இதனால் வருடம் வருடம் இந்த கோயிலுக்கு மாலை அணிந்து பலரும் தங்களுடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும் இந்த மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் தலைவராக பங்காரு அடிகளார் இருக்கிறார். இவர் ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர். இவர் மேல்மருவத்தூரில் உள்ள கோயிலில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர். இவரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது கூட வழங்கப்பட்டுள்ளது. இவர் மேல்மருவத்தூர் அம்மன் கோயில் மட்டும் இல்லாமல் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

பங்காரு அடிகளார் குறித்த தகவல்:

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் தேவா அவர்கள் பங்காரு அடிகளாரை புகழ்ந்து பாடியிருந்தது அனைவரும் அறிந்தது. பாமர மக்கள் கூட அம்மன் சன்னிதானத்தில் சென்று வழிப்பாடு நடத்தலாம் என்ற புரட்சியை செய்தவர். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் பூஜை செய்யலாம் என்றும், சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகத்திற்கு சொன்னவர் பங்காரு அடிகள். சபரிமலைக்கு எப்படி இருமுடி கட்டி வருகிறார்களோ அதே போல பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி பீடத்திற்கும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

பங்காரு அடிகளார் இறப்பு:

இவர் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து இருக்கிறார். இவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் பிற நாடுகளிலும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று மாலை இவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு 82 வயதாகிறது. ஏற்கனவே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையும் அளித்திருந்தார்கள். இருந்தாலும், தற்போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்.

-விளம்பரம்-

பங்காரு அடிகளார் குடும்பம்:

இவருடைய மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவருடைய இறப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பங்காரு அடிகளார் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு ஜிபி செந்தில், ஜிபி அன்பழகன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா அவர்கள் மனம் உருகி இரங்கல் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

தேவா இரங்கல் வீடியோ:

அதில் அவர், பங்காரு அடிகளார் இறைவனடி சென்று விட்டார் என்ற செய்தி கேட்டது எனக்கு மனது தாங்கவில்லை. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் நான், ஸ்ரீகாந்தும் வெளிநாட்டு கச்சேரிக்கு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்தோம். நேற்று அவர் இறந்த செய்தி கேட்டதும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏதோ என்னிடம் இருந்து சென்றது போலவே இருக்கிறது. எப்போதும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி தான் எந்த செயலையும் செய்வோம். தற்போது அவர் இறைவனடி சென்று விட்டார் என்று கேள்விப்பட்டது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஓம் சக்தி என்று கூறி இருக்கிறார்.

Advertisement