யாரு இந்த தாத்தா, தீயாக பரவும் வீடியோ. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

0
634
Bluesattai
- Advertisement -

ரஜினிகாந்த் போலவே இருக்கும் வயதான நபரின் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்து இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

‘லியோ படம்:

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. லியோ படம் முதல் நாளில் நல்ல வசூல் சாதனையும் செய்திருக்கிறது.

லியோ வசூல்:

மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 30 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஜெயிலர் வசூல் சாதனையை லியோ முறியடித்து இருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்தை முதல் நாளே நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார் என்று புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் போல இருக்கும் நபர்:

தற்போது ரஜினிகாந்த் போலவே இருக்கும் வயதான நபர் ஒருவரின் வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், அவருக்கு 72 வயதாகும். நடிகர் ரஜினிகாந்த் மேக்கப், விக் இல்லாமல் சாதாரணமாக எப்படி இருக்கிறாரோ அதேபோல அந்த வயதான நபரும் இருக்கிறார். அவருடன் சிலர் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை தான் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து, க்ரீன் மேட்ல நடிச்சி, VFX ல சண்ட போட்டு 100 கோடி, 150 கோடி வாங்கறார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

அவருக்கு பேரு தலீவர். ஒருத்தர் நிஜத்துல சண்ட போட்டு, அவுட்டோர் எல்லாம் போய் கஷ்டப்பட்டாலும் சம்பளம் 10 ஆயிரம், 20 ஆயிரம்தான். ஆனா அவருக்கு பேரு டூப். டூப் நிரந்தரம்… மக்களுக்கு அல்வா கொடுக்கறோம் என்று ரஜினியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement