ஹோட்டலில் சாப்பாடு, சொந்த காரில் அழைத்து சென்று ஷாப்பிங் – தன் திருமண நாளில் வீடற்ற தாய் மற்றும் குழந்தைகளை நெகிழ வைத்த உமா ரியாஸ்.

0
591
uma
- Advertisement -

திருமண நாளை முன்னிட்டு வீடு இல்லாத தாய், மகளுக்கு உமா ரியாஸ்கான் செய்து இருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார். பிறகு இவர் நடிகை உமாவை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர்களுக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அதில் இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். உமா ரியாஸ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உமா:

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், இவர் சமைப்பது, நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

உமாவின் திருமண நாள்:

இந்த நிலையில் திருமண நாளை முன்னிட்டு உமா ரியாஸ்கான் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திருமண நாள் என்றால் பலரும் கோயில், சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் எனப் பல இடங்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். அதில் சில பேர் ஆசிரமத்துக்கு உணவு, உடை வாங்கி தருவார்கள். ஆனால், நடிகை உமா ரியாஸ்கான் கொஞ்சம் வித்தியாசமாக தன்னுடைய 30ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

உமா வெளியிட்ட வீடியோ:

அது சம்பந்தப்பட்ட வீடியோவை இவர் வெளியிட்டிருக்கிறார். அதில் உமா ரியாஸ்கான், அனைவருமே என்னிடம் திருமண நாளுக்கு என்ன ஸ்பெஷல்? என்று கேட்டிருந்தார்கள். யாருக்காவது ஏதாவது நன்மை செய்தால் பிறரிடம் சொல்லக் கூடாது என்பார். ஆனால், பலருக்கும் உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதற்காகத் தான் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறேன் என்று கூறி அவர் பகிர்ந்த வீடியோவில் ரோட்டோரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணி மற்றும் அவரின் 4 வயது பெண் குழந்தையை காட்டினார்.

திருமண நாளில் உமா செய்த செயல்:

அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்ணிற்கு கைக் குழந்தையும் இருந்தது. வீடு எதுவும் இல்லாமல் இவர்கள் தெருவோரத்தில் பொம்மை விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மதிய உணவு வாங்கித் தந்து அவர்களுடன் உமாவும் சாப்பிட்டிருக்கிறார். பின் அவர்களை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று புதிய செருப்பு, உடை, அந்த பெண்ணிற்கு தேவையான ஹார்லிக்ஸ் என வாங்கித்தந்து அனுப்பியிருக்கிறார். பின் கடைசியாக உமா, நான் செய்தது சிறிய உதவி தான். ஆனால், அவர்களுக்கு பெரியது. எனக்கும் மனம் நிறைவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement