இனி இசை கச்சேரிகளில் இசைஞானியின் பாடல்களை பாட வேண்டும் என்றால் – திரையிசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா தகவல்.

0
2137
Dhina
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு 80ஸ் காலகட்டத்தில் ஹீரோ ஹீரோயினை புக் செய்யும் முன்பாக இளையராஜாவை தான் முதலில் இயக்குனர்கள் புக் செய்வார்கள். அதற்கு காரணம் இவர் இசையமைத்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் என்று நம்பினார்கள்.

-விளம்பரம்-

இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இளையராஜா திரைப்பயணம்:

மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய பாடலுக்கான காப்புரிமை தொகையை இளையராஜா அவர்கள் நலிந்த இசை கலைஞர்களுக்கு கொடுப்பதாக பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதை இசை கலைஞர் சங்கத்தின் தலைவரான தீனாவிடம் ஒப்படைத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

தீனா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து திரை இசை கலைஞர் சங்கத்தின் தீனாவிடம் கேட்டபோது அவர் கூறியது, அது உண்மைதான். இசைஞானியின் பாடல்களுக்கான காப்புரிமைகளுக்கான மேற்பார்வையினை செய்யும் பொறுப்பை ராஜா சார் எங்களிடம் கொடுத்தார். பாடல்களின் காப்புரிமை யாருக்கேனும் வேணும் என்றால் அவர்கள் தாராளமாக திரை இசை கலைஞர்கள் சங்கத்தை கேட்கலாம். இசை கச்சேரிகளில் இசைஞானியின் பாடல்களை பாட வேண்டும் என்றால் எத்தனை பாட்டு வேண்டும் என்று கேட்டு அதற்கான காப்புரிமைகளை நாங்களே செய்து கொடுக்கிறோம்.

-விளம்பரம்-

இளையராஜா பாடல் காப்புரிமை:

உதாரணம், இசை நிகழ்ச்சி அல்லது சாட்டிலைட் டிவி அல்லது புதிய படங்கள் மற்றும் ஆல்பங்கள் ரீமிக்ஸ் போன்று இப்படி எதற்கு விரும்பினாலோ, எந்தெந்த பாடல்கள் விரும்புகிறார்களோ அந்த பாடலை குறித்து விவரங்களை எங்களிடம் சொன்னால் போதும் நாங்கள் அதற்கான காப்பிரிமை விஷயங்களை ஏற்பாடு செய்து தருகிறோம். சில நேரங்களில் இந்த பொறுப்பை ராஜா சாரே நேரடியாக ஏற்றுக்கொள்கிறார். அவர் இல்லை என்றால் ஸ்ரீ ராம் சார் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

இசை சங்க கலைஞர் குறித்த தகவல்:

இவ்வளவு பெரிய பொறுப்பை ராஜசேகர் எங்களிடம் கொடுத்து இருக்கிறார். எங்கள் சங்கத்தில் மொத்தம் 1223 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாங்கள் ராஜா சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இரண்டு வருடத்திற்கு முன்னாடி எங்களுடைய இசைக்கலைஞர்கள் சங்கத்தை ராஜா சார் புதுப்பித்து தருவதாக சொல்லியிருந்தார். கொரோனா சூழ்நிலையால் அதற்கான வேலைகளை தொடங்க முடியாமல் போனது.

தீனா குறித்த தகவல்:

சமீபத்தில் அவருடைய பிறந்தநாளில் எங்களுக்கு அவர் ஒப்புதல் கொடுத்து இருந்தார். சென்னை பெருநகர மாநகராட்சி ஒப்புதல் கிடைத்தவுடன் எங்கள் அறக்கட்டளையின் கட்டட வேலைகள் தொடங்கி விடுவோம். கட்டடப் பணியினை தொடங்க சம்மதம் சொன்ன ராஜா சாருக்கு எங்க சங்கம் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தீனா. இவர் விக்ரம் நடித்த கிங், பிரபுவின் மிடில் கிளாஸ் மாதவன், தனுஷின் திருடா திருடி போன்ற பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement